சென்னை, மே 2- காவிரியில் தமிழ்நாட்டுக்கு கருநாடகம் தண்ணீர் தராதது குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுரு கன் தெரிவித்துள்ளார். காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை, அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என காரணம் கூறி, கருநாடக அரசு தர மறுத்து வருகிறது.
இந்நிலையில், காவிரி ஒழுங் காற்றுக் குழுவின் 95ஆவது கூட்டம் நேற்று முன்தினம் (30.4.2024) டில்லியில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மே மாதத்தில் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய 25 டிஎம்சி நீரை தரும்படி தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. ஆனால், கரு நாடகாவில் வறட்சி நிலவுவ தாக கூறி, தண்ணீரை தர கருநாடகா மறுத்துவிட்டது.
அதே நேரம் ஒழுங்காற்றுக் குழுவும், மே 16-ஆம் தேதி அடுத்த கூட்டம் நடைபெறும் என்றும், அதில் தண்ணீர் விடுவிப்பது குறித்து ஆய்வு செய்யலாம் என கூறிவிட்டது. இதனால், காவிரி நீரை நம்பிய பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட் டுள்ளது.
இந்நிலையில், நேற்று (1.5.2024) மே தின பேரணியில் பங்கேற்ற தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரை முரு கனிடம் செய்தியாளர்கள் காவிரி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்ததாவது:
நாங்கள் தண்ணீர் திறந்து விடுவோம் என்று கருநாடக அரசு என்றுமே கூறியதில்லை. அதிகமாக தண்ணீர் இருக்கும் போதும், குறைந்த தண்ணீர் இருக்கும்போதும் அவர்கள் அதையே கூறி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரி யம் திறந்து விட வேண்டும் என்று கூறியபோதும், திறக்க மாட்டேன் என்று கூறுகிறார் கள். எனவே, ஒன்றிய அரசை கருநாடக அரசு மதிக்காமல் நடந்து கொள்கிறது. இதை கேள்வி கேட்க வேண்டியது உச்ச நீதிமன்றம். அதை நாங் கள் நாடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, டில்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தின்போது தமிழ்நாடு அரசு தரப்பில், ‘‘மே மாதத்தில் வழங்க வேண்டிய 25 டிஎம்சி நீரை திறக்க உத்தரவிட வேண் டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கான 2.5 டிஎம்சி நீரையும் கருநாடகா திறந்துவிட வேண் டும்”என கோரப்பட்டது.
இதற்கு கருநாடக அரசின் தரப்பில், ‘‘கருநாடகாவில் கடும் வறட்சி நிலவுகிறது.
தமிழ்நாட்டுக்கு நீரை திறந்து விட்டால் கருநாடகாவில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். தற் போதைய சூழலில் நீரை திறந்துவிட இயலாது” என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு தமிழ்நாடு அரசின் தரப்பில், ‘‘குறைந்த மழை பொழிவுக் காலங்களில் தமிழ் நாட்டுக்கு வழங்க வேண்டிய 5.317 டிஎம்சி நீரையும், மே மாதத்துக்கான 2.5 டிஎம்சி நீரையும் கருநாடகா திறந்து விட வேண்டும்” என வலியுறுத் தப்பட்டது. அதற்கும் கரு நாடக அரசின் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் காவிரி ஒழுங் காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா, ‘‘2.5 டிஎம்சி சுற்றுச் சூழல் பாதுகாப்பு நீரை கரு நாடகா திறந்துவிட வேண் டும்.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்கக்கூடிய நிலையில் கருநாடகாவின் நீர் நிலைமை இல்லை. மே மாதம் இரண்டாவது வாரத்துக்கு பின்னர் அந்த கோரிக்கை குறித்து ஆராயலாம். காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் மே 16ஆ-ம் தேதி நடைபெறும்” என தெரிவித்துவிட்டார்.