கபிஸ்தலம், செப். 12 – பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் அமைந்துள்ள மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – சமூக நீதி நாள் விழா-2023 செப்டம்பர் 17 – தொடர்பான நிகழ்ச்சிகள் 09.09.2023 காலை 10 மணியளவில் நடைபெற்றது.
பள்ளியினுடைய முதல்வர் க. முருகானந்தம் அனைவரை யும் வரவேற்று உரையாற்றினார். பள்ளியின் தாளாளர் சு. கலியமூர்த்தி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் “தந்தை பெரியா ரும் பெண் விடுதலையும்” என்னும் தலைப்பில் பேச்சுப் போட்டியில் கலந்து கொண் டார்கள். ஏழாம் வகுப்பு மாணவர்கள் “மூடநம்பிக்கை ஒழிப்பில் தந்தை பெரியார்” என்னும் தலைப்பிலும், எட் டாம் வகுப்பு மாணவர்கள் “தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும்” என்னும் தலைப் பிலும், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் “பெண் ஏன் அடிமையானாள்..? ” என்னும் தலைப்பிலும், அனல் பறக்க உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தந்தை பெரியாரின் உழைப்பு, அதற்குப் பின்னால் மக்களி டையே ஏற்பட்டிருக்கிற மாற் றங்கள் குறித்தும் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக உரிமை, பெண்ணுரிமை, போன்ற கருத்துகளை மய்யப்படுத்தி சிறப்பாக பேசினார்கள்.
யார் சொன்னாலும் நம்பி விடாதே அது பெற்றோராக இருந்தாலும், மகானாக இருந் தாலும், ஆசிரியர்களாக இருந் தாலும், அவர்கள் சொன்னது உனது அறிவிற்கு சரி என்று படுகிறதா..? என்பதை சிந்தித்து ஏற்றுக் கொள்! இல்லையேல் விட்டுவிடு! என்று தந்தை பெரியார் சொன்னதை ஆணித் தரமாக பல மாணவர்கள் எடுத்துரைத்தார்கள்.
10 மற்றும் 12 வயது குழந்தை களுக்கு சிறார் திருமணம் செய்து வைத்ததும், கணவன் இறந்து விட்டால் பெண் குழந் தைகளுக்கு வெள்ளை ஆடை கொடுத்து, மொட்டை அடித்து மூலையில் அமர வைப்பதும், இன்னும் சில கடந்த காலங்களில் கணவன் இறந்து விட்டால் அவனு டையே உடன்கட்டை ஏற்றிய தையும் கூறி தந்தை பெரியார் உழைப்பிற்கு பின்னால் பெண் களுக்கான வாழ்வியல் மாற் றத்தை குறிப்பிட்டு பிஞ்சு மாணவர்கள் சிறப்பாக எடுத்துக் கூறினார்கள்.
உலகத்திலேயே தந்தை பெரியார்தான் பெண் சமூகத்தின் சீர்திருத்த மாற்றத்திற்கு அரும்பாடு பட்ட ஒப்பற்ற ஒரே தலைவர். அதனால் தான் இன்றைக்கு அனைத்து துறை யிலும் பெண்களின் முன்னேற் றங்கள் ஏற்பட்டன என்றும் மேலும் பெண்ணின ஆட்சி திறமைகளையும் எடுத்துக் காட்டி அந்த குழந்தைகள் அடுக்கடுக்காக பேசினார்கள்.
நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க. குருசாமி, சிறப்பாக உரையாற்றிய மாணவச் செல்வங்களை யும், அதற்கு காரணமாக விளங் கிய ஆசிரியர் பெருமக்களையும், நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்த பள்ளித் தாளாளர் சு.கலியமூர்த்தியை யும் பாராட்டி வாழ்த்தி உரை நிகழ்த்தினர்.
முதுகலை தமிழ் ஆசிரியர் கு.இரமேஷ் நன்றி உரை யாற்றினார்.