தூக்கத்தைப் பொறுத்தவரை நீண்ட தொடர் தூக்கமும் கூடாது. குறைந்த அளவு தூங்கி, தூக்கத்தைத் தொலைத்து விடவும் கூடாது! இது உடல் நலம் காக்க விரும்பும் அனைவரும் பின்பற்ற வேண்டிய மருத்துவர்களின் அறிவுரை.
குறைந்தது 7 அல்லது 8 மணி நேர தூக்கம் மனித உடலுக்கு மிகவும் இன்றியமையாதது என் பதை மாறுபாடின்றி மருத்துவ உலகம் கூறுகின்றது!
உணவு எப்படி முக்கியமோ,
உழைப்பு எப்படித் தேவையோ,
உடற் பயிற்சி – நடைப் பயிற்சி போன்றவை எவ்வளவு அவசியமோ,
அவ்வளவு தேவை தூக்கமும்கூட!
“தூங்காதே தம்பி, தூங்காதே” என்று பட்டுக்கோட்டையார் எழுதி, எம்.ஜி.ஆர். பாடியது சரிதான் – அதன் பொருளைச் சரியாக புரிந்து கொண்டால் – சதா தூக்கம் என்ற அளவைக் கடந்தும் தூங்க விரும்புகிறவர்களுக்கும், சோம்பேறிகளுக்குமான அறிவுரையே அது! கச்சிதமாக கடமையாற்றுபவருக்கு அல்ல! தூக்கத்தினால் மீண்டும் இளைப்பாறி, களைப்பாறி புத்துணர்ச்சியைப் பெறுகிறோம் நாம் என்பது பொதுவாக நாம் அனைவருமே அறிந்த ஒன்று தான்!
ஆனால், தூக்கம்பற்றி நம்மில் பலர் (மருத் துவர்கள் இதற்கு விதி விலக்கு) தெரிந்து கொள்ள வேண்டிய அரிய உண்மையை அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பள்ளி (செயிண்ட் லூயிஸ் நகரத்திலுள்ளது) தூக்கம் பற்றிய ஓர் ஆராய்ச்சியை செய்து, அதன் முடிவை பிரபலமான ‘நேச்சர்’ (‘Nature’) என்ற அறிவியல் ஆய்வுக்களஞ்சிய ஏட்டில் வெளி யிட்டுள்ளது.
நாம் உறங்கும்போது, நமது மூளையும் நம்முடன் உள்ள இதர உறுப்புகளைப்போல ஓய்வு எடுத்துக் கொள்வதில்லை.
இதயம் ஒன்று தான் நிற்காமல் – ஓய்வெடுக்காமல் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கும் உறுப்பு என்றும் நம்மில் பலரும் எண்ணிக் கொண்டுள்ளோம்.
உண்மை அப்படி இல்லை; மூளையும் இதயத்தோடு போட்டி போடுவதுபோல சதா 24 மணி நேரமும் – நாம் உறங்கும்போதும், அது ஓய்வு எடுக்காது உருப்படியான ஒப்பற்ற ஒரு உயர் பணியை கடமையெனச் செய்கிறது என்று கண்டறிந்துள்ளனர் மருத்துவ அறிவியல் ஆய்வாளர்கள்.
தூக்கத்தின்போது நமது மூளையின் செல்கள் (Cells) மின் அலைபோன்ற இதயத் துடிப்போடு அலைகளை உருவாக்குகிறது.
லி பெங்ஃ ஜியாங் ஜீயே Li Feng – Jiang – Xie என்ற நரம்பியல் வல்லுநர் ஆய்வு செய்து, “நமக்கு மூளையில் உருவாகி வரும் கழிவுகளை வெளி யேற்றி உடலை, மூளையை தூய்மையாக்கி இயக்கப் பெரிதும் துணை செய்வது தூக்கம்!” என்கிறார்.
The team silenced specific brain regions so that neurons in those did not create the waves,
அலை அடிப்பதையே இந்த நியூரான்கள் உருவாக்காமல் செய்து விடுகிறது.
இதனால் – இந்த அலைகள் பாயாமல் தடுப்பதால், புதிதாக Cerebro spinal fluid என்ற ஒரு முதுகுத் தண்டுவடத்தில் பாயும் அலைகளைத் தடுத்திடும் வகையில் மூளை தசைகள் பாதுகாக்கின்றன.
இதனால் அல்ஷைமர்ஸ் என்ற கொடிய மறதி நோய் மற்றும் பர்க்கின்சன்ஸ் என்ற பக்கவாத நோய் – முதலியவை – அதிகமான மூளைக் கழிவு வெளியேறாததால் உண்டாகும் ஆபத் தினை – இத்தூக்கம் அகற்றுகிறது என்று ஆய்வறிக்கை கூறி நம்மைத் தூங்கத் தாலாட்டுப் பாடி மகிழ்விக்கிறது!
கூடுதலாக உள்ள Metobolic waste and junk proteins (தேவையற்றவை) மூளைக்குள் சேரவிடாமல் தூக்கம் சரியான காவலாளியாக நின்று நமக்கு நல்ல பாதுகாவலராக பணிபுரிகின்றது!
என்னே வியத்தகு விஞ்ஞான சாதனை!
அறிவியலே உன்னை எப்படித்தான் பாராட்டுவது, உனக்கு எப்படித்தான் நன்றி கூறுவது என்று தெரியாமல் தவிக்கிறோம்.
என்னைப் போலிகளுடன் தள்ளி – ராம் தேவ்களின் கஜானாவுக்குள் தள்ளாது – காப் பாற்றினால் போதும்; எனக்கு உங்கள் நன்றியும் ஒரு புடலங்காயும் வேண்டாம் என்றுதான் அறிவியல் பதில் கூறும்! இல்லையா?
தூங்குங்கள் நன்றாக – தூங்க வேண்டிய நேரத்தில்!

Leave a Comment