சென்னையில் வேகமாகப் பரவி வரும் ‘மெட்ராஸ் – அய்’ 12 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆணை

3 Min Read

அரசு, தமிழ்நாடு


சென்னை, செப். 13-
  சென்னையில் “மெட்ராஸ் அய்” வேகமாக பரவுவ தால் 12 லட்சம் மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் கண் பரிசோதனை செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட் டுள்ளார்.

எழும்பூர் அரசு கண் மருத்துவ மனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் நேற்று (12.9.2023) ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந் தார். இதேபோல, ‘மெட்ராஸ் அய்’ நோயால் பாதிக்கப்பட்டோ ருக்கான வார்டில் சென்று ஆய்வு மேற்கொண்டு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-

‘மெட்ராஸ் அய்’ என்று அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி நோய் சென்னை பகுதியில் சற்று அதிகரிக்க தொடங்கியுள் ளது. குஜராத், மகாராட்டிரா, அசாம் போன்ற பல்வேறு மாநி லங்களிலும் இந்த நோய் அதிக ரித்து வருகிறது. ஒவ்வொரு வருட மும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக இந்த நோய் பாதிப்பு என்பது கூடுதலாகி கொண்டிருக் கிறது. தமிழ்நாடு அரசு எடுத்த விழிப்புணர்வு நடவடிக்கைகளால் இந்தாண்டு நாள் ஒன்றுக்கு 100க்கும் குறைவானவர்களே இந் நோயால் பாதிக்கப்பட்டு மருத்து வமனைக்கு வருகிறார்கள்.

எழும்பூர் அரசு மருத்துவமனை யில் உள்ள ‘மெட்ராஸ் அய்’ வார்டில் தற்போது 5 பேர் மட் டுமே சிகிச்சை பெற்று வருகி றார்கள். கண் வலி, கண் சிவந்து போகுதல், கண்களில் நீர் வழிதல், எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படு தல், கண்களில் தூசி அல்லது வேறு வெளிப்பொருள் உள்ளது போன்ற உணர்வு ஏற்படுதல் இதன் அறிகுறியாகும். இது பருவ நிலை மாறுபாட்டினாலும் ஒரு விதமான வைரஸ் மற்றும் பாக்டீரி யாவால் வரக்கூடியது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டால் கண் கள் மற்றும் கைகளை நல்ல நீரி னால் அடிக்கடி கழுவ வேண்டும். 

சுயமாக மருந்துகளை பயன் படுத்தக்கூடாது. பொது இடங்க ளுக்கு செல்வதை தவிர்க்க வேண் டும். தொற்றால் பாதிக்கப்பட்ட வர்கள் பயன்படுத்திய திசு காகிதம் மற்றும் கைக்குட்டையை மற்ற வர்கள் பயன்படுத்தக்கூடாது. நல்ல ஆரோக்கியமான நீர்ச்சத்து மிகுந்த வைட்டமின் ஏ மற்றும் சி சத்துள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். கண்ணுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். பொதுமக்கள் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைப் பிடிக்க வேண்டும். இதேபோல, ‘மெட் ராஸ் அய்’ சிகிச்சைக்கான மருந் துகள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘மெட்ராஸ் அய்’ குறித்து மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. எனவே, சென் னையில் மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு நிதி யுதவி பெறும் பள்ளிகள் என்று ஏறத்தாழ 12 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இந்த மாதம் கண் பரிசோதனை செய்ய முடிவெடுக் கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தொடர்ச்சி யாக அனைத்து பள்ளிகளிலும் கண் பரிசோதனை செய்யப்படும். 400-க்கும் மேற்பட்ட அரசு கண் மருத்துவர்கள், தனியார் மருத்துவ மனை மருத்துவர்கள் இதில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன்,  மருத் துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சாந்திமலர், எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக் குநர் தங்கராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *