புதுடில்லி,செப்.14 – சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 5 பேர், நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் டிவிட்டர் வலை தளத்தில் 12.9.2023 அன்று வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ள தாவது:
இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுடன் ஆலோ சனை மேற்கொண்டு, சென்னை மற்றும் கருநாடக உயர்நீதிமன்றங்க ளுக்கு நீதிபதிகள் மற்றும் கூடுதல் நீதிபதியை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.
அதன்படி, சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளாக எ.எ.நக்கீரன், நிடுமொலு மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர் மோகன், கபாலி குமரேஷ் பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள் ளனர். இவர்கள் 5 பேரும் ஏற் கெனவே சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ளனர்.
இதேபோல கருநாடக உயர்நீதி மன்ற நீதிபதியாக அனந்த் ராமநாத் ஹெக்டே, ஹேமலேகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கெனவே அந்த உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக உள்ளனர் என்று தெரிவித்தார்.