பெண்கள் அர்ச்சகர் நியமனம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சமுகவலைதளப்பதிவு –
பணி ஆணை பெற்ற பெண் அர்ச்சகர்கள் ரம்யா, ரஞ்சிதா, கிருஷ்ணவேணி- விண்வெளிக்குச் சென்றாலும் கருவறைக்குச் செல் லாத நிலை முடிவிற்கு வந்தது.
பெண்கள் விமானத்தை இயக் கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கட வுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.
ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது ‘திராவிடமாடல்’ ஆட்சி அகற் றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள் செல்ல முடியும்.
இதையே ஆங்கிலத்திலும் இவ்வாறு பதிவிட்டுள்ளார்
Despite women’s achievements as pilots and astronauts, they were barred from the sacred role of temple priests, deemed impure, even in the temples for female deities. But change is finally here!
In Tamil Nadu, as our #DravidianModel Government has removed the thorn from Thanthai Periyar’s heart by appointing people of all castes as priests, women are also now stepping into the sanctums, bringing a new era of inclusivity and equality.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள சமுகவலைதளப்பதிவில்
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றி ருக்கும் ரம்யா, கிருஷ்ணவேணி, திருமிகு. ரஞ்சிதா ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பெண்கள் நுழைய உரிமை மறுக்கப்பட்ட இடத்திலிருந்து இனி ஒலிக்கப் போகும் அம்மூன்று பெண்களின் குரல்களும் சமூகநீதி வரலாற்றின் புதிய அத்தியாயமாயி ருக்கும். இதைச் சாத்தியப்படுத்தி யிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் அவர்களுக் கும், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்களுக்கும் வாழ்த் துகள். என்று கூறியுள்ளார்.