சென்னை, ஏப். 23- தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன் என்பது பற்றி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
வாக்குப் பதிவு சமயத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் சென்னையை பொறுத் தவரை பல பேர் வெளியூர் சென்றுவிட் டனர். அதனால்தான் வாக்குப் பதிவு குறைந்ததாக கருதுகிறோம்.
கேள்வி:-தமிழ்நாடு முழுவதும் பல தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளதே? வெயில் அதிகமாக இருந்ததால் பல பேர் ஓட்டுப் போட வரவில்லை என்று கூறுகிறார்களே?
பதில்:- வெயில் மட்டும் காரணம் கிடையாது. பொதுவாகவே ஒரு மாநில அரசு மீது வெறுப்பு இருந் தால் தான் வாக்குப்பதிவு அதிகமா கும். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க. அரசு மீது மக்களுக்கு வெறுப்பு கிடையாது. இதுவும் ஒரு காரணமாக இருக்க லாம்.
கேள்வி:- வாக்காளர் பட்டிய லில் நிறையபேர் பெயர்கள் விடு பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறு கிறார்களே?
பதில்:- ஆமாம். வாக்காளர் பட் டியலில் பெயர்கள் விடுபட்டுள் ளதை தேர்தல் ஆணையம் பார்த் திருக்க வேண்டும். தி.மு.க. சார்பில் நாங்கள் பலமுறை தேர்தல் ஆணை யத்தில் வலியுறுத்தி இருக்கிறோம்.
தி.மு.க. சார்பில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர் களை சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடைசியாக கூட்டிய அனைத்துக் கட்சி கூட் டத்தில் கூட சொன்னேன்.
ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதுபற்றி அப் போதே நான் பேட்டியும் கொடுத் திருந்தேன்.
வாக்காளர் பட்டியலை தேர் தல் ஆணையம் சரிபார்த்திருக்க வேண்டும். ஆனால் அதை தவற விட்டார்கள்.
இது தேர்தல் ஆணையத்தின் கவனக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.
-இவ்வாறு அவர் கூறினார்.