அரியலூர், ஏப்.20– தமிழ்நாடு — புதுச்சேரியில் 40 தொகுதிகளி லும் இந்தியா கூட்டணி வெல் லும் என்று விடுதலைச் சிறுத் தைகள் தலைவர் தொல். திருமா வளவன் நம்பிக்கை தெரிவித் துள்ளார். “இந்த பொதுத் தேர் தல், இரண்டு கட்சிகளுக்கு இடையே நடக்கும் அதிகார போட்டி அல்ல. ஒருபுறம் இந்திய நாட்டு மக்கள், இன்னொரு புறம் நாட்டுக்கு எதிரான சங்பரிவார் கும்பல். எனவே, சங்பரி வாருக்கும், நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கிற ஒரு தர்மயுத்தம்.
இதில் நாட்டு மக்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மக்க ளின் பக்கம் ‘இந்தியா’ கூட்டணி கட் சிகள் இருக்கிறோம். இந்திய அரச மைப்பு சட்டத்தைப் பாதுகாக்க இந்த கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
அரசமைப்புச் சட்டத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஜனநாயக விழுமியங்களைச் சிதைக்கத் துடிக் கிற ‘சங்- பரிவார்’ கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது. இத னால் தான், ஜனநாயகத்தையும், அர சமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற பெரும் கவலை யோடு இந்தியா கூட்டணி களத்தில் நிற்கிறது. நாடு முழுவதும் இந்திய கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக் கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
40 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வெல்லும்! தொல். திருமாவளவன் நம்பிக்கை
Leave a Comment