சென்னை, ஏப்.20- சென்னையில் 3,726 வாக்குச்சாவடிகளில் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 48.69 லட்சம் பேர் ஓட்டு போடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருந்தன. 39 சதவீதம் அளவி லான மய்யங்களில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பெண்கள் மட்டுமே பணிபுரி யும் வகையில் 16 இடங்களில் 1,461 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட் டிருந்தன. இந்த சாவடிகளில் காவல் துறையினர் உள்பட அனைத்து தேர்தல் அலுவலர் களும் பெண்களாகவே பணியமர்த் தப்பட்டிருந்தனர்.
இந்த மய்யங்கள் இளஞ்சிவப்பு (பிங்க்) கலரில் வடிவமைக்கப்பட்டி ருந்தது. பெண்களுக்கான அங்கீ காரம் மற்றும் மரியாதையை உயர்த்தும் வகையில் முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்பட்ட இந்த மய்யங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
பெண்களால் மட்டுமே நிர் வகிக்கப்பட்ட இந்த மய்யங்கள் சென்னை மாநகர் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன.
அதன்படி ஆர்.கே.நகர் பகுதி யில் 30 பேர், பெரம்பூர் பகுதியில் 66 பேர், கொளத்தூர் பகுதியில் 49 பேர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். வில்லிவாக்கம் பகுதியில் 38 பேர், திரு.வி.க.நகரில் 21 பேர், எழும்பூரில் 48 பேர், ராயபுரத்தில் 40 பேர், துறைமுகத்தில் 18 பேர், சேப்பாக் கம்-திருவல்லிக்கேணியில் 62 பேர், ஆயிரம் விளக்கில் 145 பேர், அண்ணா நகரில் 140 பேர், விருகம் பாக்கத்தில் 183 பேர், சைதாப் பேட்டையில் 158 பேர், தி.நகரில் 163 பேர், மயிலாப்பூரில் 187 பேர், வேளச்சேரியில் 113 பேர் என சட்டமன்ற தொகுதி வாரியாக பெண் பணியாளர்கள் தனித் தனியாக பிரிக்கப்பட்டு வாக்குப் பதிவு மய்யங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பணியில் ஈடுபட்ட னர்.
சென்னையில் அனைத்து வாக் குச் சாவடிகளிலும் கியூ ஆர் குறி யீடு கொண்ட சுவரொட்டி ஒட் டப்பட்டு உள்ளது. அதை ஸ்கேன் செய்து தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தால் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதனை பொதுமக்கள் ஸ்கேன் செய்து கேள்விகளுக்கும் விடை அளித்தனர். இந்த மய்யங்களில் கர்ப்பிணிகள், மூதாட்டிகள், கைக் குழந்தையுடன் வருபவர்கள் ஓட்டு போட தனி வரிசை ஏற்படுத்தப் பட்டிருந்தது.
இதை தவிர இங்கு பிரத்யேக வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. முதியோர் ஓய்வு அறை மற்றும் உதவி மய்யம், குழந்தைகள் விளையாடும் இடம் சாய் தளங்கள் ஆகியவை இந்த மய்யங்களில் முறையாக ஏற்படுத்தப்பட்டிருந் தது.