முடிந்தன…
தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமின்றி ராஜஸ்தான் 12, உத்தரப்பிரதேசம் 8, மத்தியப் பிரதேசம் 6, மகாராட்டிரா, அசாம், உத்தராகண்ட் தலா 5, பீகார் 4, மேற்கு வங்கம் 3, மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் தலா 2, சத்தீஸ்கர், காஷ்மீர், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், லட்சத்தீவு, அந்தமானில் தலா ஒரு மக்களவை தொகுதி என நாடு முழுவதும் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (19.4.2024) வாக்குப்பதிவு நடைபெற்றது.
மணிப்பூரில்…
இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நேற்று மக்களவை தேர்தலின்போது துப்பாக்கிச் சூடு, வாக்குச் சாவடிகளை கைப்பற்றும் முயற்சி மின்னணு இயந்திரங்கள் உடைப்பு என வன்முறை நிகழ்வுகள் அரங்கேறின. இதனால் பல வாக்குச்சாவடிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது.
ஏவுகணை
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை முதல் முறையாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நேற்று ஏற்றுமதி செய்யப்பட்டது.
மகளிரே…
சென்னையில் நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் 1,461 வாக்குச்சாவடிகளை 100 சதவீதம் பெண்களே நிர்வகித்தனர். இதில் 16 வாக்குச்சாவடிகள் இளம் சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது வரவேற்பை பெற்றது.
குணமடைந்த…
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 61 பேருக்கு 2024 மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை கொடுக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 36 ஆண்கள், 25 பெண்கள் என மொத்தம் 61 பேரும் மருத்துவமனை வளாகத்தில் வாக்களித்தனர்.
வாக்களிப்பு…
மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடி மய்யத்தில் பொதுமக்கள் மற்றும் நரிக் குறவர்கள், இருளர் இன மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வாய்ப்பு
தமிழ்நாட்டின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையும் 21, 22, 23 தேதி களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
சேர்க்க…
இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்க உள்ளது.
செய்திச் சுருக்கம்
Leave a Comment