சென்னை, ஏப். 19- நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடை கிறது. காலை முதலே மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வரு கின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிக ளிலும் இன்று (19.4.2024) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாது காப்பு போடப்பட்டு உள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.அய்.இ.டி கல்லூரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார். மனைவி கிருத்திகாவுடன் வந்த உதயநிதி ஸ்டாலின் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றினார்.
இந்த நிலையில், உலகில் உயரம் குறைவான பெண் என்ற சாதனைக்குச் சொந்தமான 30 வயதாகும் ஜோதி அம்கே, மராட்டிய மாநிலம் நாக்பூரில் தனது வாக்கினை செலுத்தினார். உலகி லேயே மிகவும் உயரம் குறை வான பெண் ஜோதி அம்கே. 62.8 செ.மீ. உயரம் மட்டுமே உள்ள இவர், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். மராட் டிய மாநிலம் நாக்பூரில் வசித்து வருகிறார்.
தமிழ்நாட்டில் பகல் 1 மணி நிலவரப்படி 30 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக் கின்றன.