நான்காயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் காலணி தொழிற்சாலை

2 Min Read

தமிழ்நாடு அரசு தகவல்

தமிழ்நாடு

பெரம்பலூர், நவ. 21- காலணி தொழிற் பூங்காவில் ‘க்ராக்ஸ் பிராண்ட்’ காலணி தயாரிக்கும் முதல் தொழிற்சாலை நவம்பர் 28ஆம் தேதி தொடங்க உள்ளது.

தமிழ்நாட்டை காலணிகள் உற் பத்தி மற்றும் ஏற்றுமதி ஹப் ஆக மாற்ற வேண்டும் என்ற முக்கியத் திட்டத்துடன் சென்னையில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் பெரம்பலூர் பகுதி யில் காலணி தொழிற் பூங்கா உருவாக்கப்பட்டது. 

காலணிகளுக்காக உருவாக்கப் பட்ட இந்தப் பிரத்தியேக காலணி தொழிற் பூங்காவில் முதல் காலணி நிறுவனமாக ஜேஆர் ஒன் ஃபுட் வேர் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை அமைத்து இந்த மாத இறுதியில் உற்பத்தியைத் துவங்க உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை யில் உள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் மற்றும் ஷூடவுன் ஃபுட்வேர் கோ ஆகிய வற்றின் கூட்டு நிறுவனம் தான் இந்த ஜேஆர் ஒன் ஃபுட்வேர் நிறு வனம். இந்த ஒரு தொழிற்சாலை வாயிலாகப் பெரம்பலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 4,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவ தாகத் தெரிகிறது.

இந்தத் தொழிற்சாலையில் அதிகளவில் பெண்களுக்கு முக்கி யத்துவம் கொடுத்து பெண்களால் இயக்கப்படும் தொழிற்சாலையாக உருவாக்கத் திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு உள்ள இந்தத் தொழிற் சாலையின் திறப்பு விழா நவம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் இந்தத் தொழிற்சாலைக்கான அடிக்கல்லை 2022 நவம்பர் 28 நாட்டினார்.

ஃபீனிக்ஸ் கோத்தாரி ஃபுட்வேர் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் சுமார் 1700 கோடி ரூபாய் முதலீட்டில் -_ காலணிக ளைத் தயாரிக்கும் தொழிற் பூங்காவை அமைக்க 1700 கோடி ரூபாய் முதலீடு செய்வதாகத் தமிழ் நாடு அரசுடன் ஆகஸ்ட் 2022 ஒப்பந்தம் செய்தது.

 பெரம்பலூரில் அமைக்கப்படும் இந்த மாபெரும் காலணி தொழிற் சாலை மூலம் இப்பகுதியை சுற்றி யுள்ள கரூர், நாமக்கல், விருத்தா சலம், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர், திருவா ரூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக் கும். இதனால் இப்பகுதிகளில் இருக்கும் மக்கள் வேலைவாய்ப்புக் காகச் சென்னை, ஓசூர், கோயம் புத்தூர், திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்குப் பயணிப் பது குறையும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *