[International Green University Award]
வல்லம், செப். 16 பெருமை மிகு பன்னாட்டு பசுமை பல்கலைக்கழக விருது, பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டிருப்பது பெரு மகிழ்ச்சிக்குரியது.
நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக் கழகத்தில் (Cornell University, New York), நேற்று (15.9.2023) நடந்த 7ஆம் பசுமை கல்வி மாநாட்டில் இந்த விருது வழங்கப் பட்டது. பல்கலைக்கழகத்தின் சார்பாக பேராசிரியர் அரசு செல்லையா பெற்றுக் கொண்டார். இந்த பசுமை கல்வி மாநாட்டின் முகப்பிலேயே, “Climatizing Education for Humanizing Future” என்று இருந்தது. பகுத்தறிவையும், மனித நேயத்தையும் வாழ்நாள் முழுதும் பரப்பிய தந்தை பெரியார் பெயர் தாங்கிய பல்கலைக் கழகத்திற்கு, விருது வழங்கிய மாநாட்டின் முகப்பிலேயே, கல்வியறிவு, மனித நேயம் போன்ற சொற்கள் இருந்தது மிகவும் பொருத்தமானது, சரியானது. 1988ஆம் ஆண்டில் அமெரிக்கா வருகை தந்திருந்த பல்கலைக்கழக வேந்தர் அவர்கள் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் அமைப் பதுபற்றி அங்கு சந்தித்த தமிழ் அன்பர்களிடம் கருத்து பகிர்ந்து கொண்டார். அவர்கள் திட்டமிடுதலிலும் வழிகாட்டுதலிலும் உருவான பல்கலைக்கழகம், இன்று பன்னாட்டு விருது வாங்கியிருக்குமளவுக்கு வளர்ந்திருப்பது பெரு மைக் குரியது. பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் எஸ். வேலுச்சாமி, பதிவா ளர் முனைவர் சிறீவித்யா, மற்றும் பேராசிரியர்கள் அனைவரின் தொடர் பசுமை செயல்பாடுகள் இவ்விருதிற்கு வழி வகுத்திருக்கிறது.
டொராண்டோ யோர்க்வில்லி பல்கலைக் கழ கத்தின் தலைவரும் துணைவேந்தருமான ஜூலியா கிறிஸ்டென்சன் ஹியூஸ் தொடக்க உரையை வழங்கினார்.
க்ரீன் மென்டார் நிறுவனர் வீரேந்திர ராவத் மாநாட்டின் கருப்பொருள் மற்றும் நோக்கங்களை அறிமுகப்படுத்தினார்.
மாநாட்டின் மய்யக் கருத்து “Green School for every child” -ஒவ்வொரு குழந்தைக்கும் பசுமைப் பள்ளி”
இந்த மாநாடு காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடந்தது. பல அமர்வுகள் வெவ்வேறு தலைப்புகளில் நடந்தன. அனைத்துமே, கல்வியையும், பசுமையையும், சமுதாயமக்களையும், அரசாங்கத் தையும் இணைப்பதாகவே அமைந்தது.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் முதல் பல்கலைக்கழக பேரா சிரியர்கள் வரை மாநாட்டில் கலந்துகொண்டனர். அரசு அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், லாபநோக்கற்ற அமைப்பின் தலைவர்கள் என பலதரப்பட்டவர்களும் உரையாற்றி தம் கருத்துகளை பதிவு செய்தார்கள்.
ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் உரையாற்றினார்கள். மாநாட்டு நிர்வாகத்தி லும், காலை முதல் மாலை வரை நிகழ்ச்சிகளை நெறியாள்கை செய்ததும் பெண்களே அதிகம்.
பகிரப்பட்ட முக்கிய கருத்துகள்:
முதலாம் வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு பசுமையறிவு கொடுக்கப்படவேண்டும்.
தாய்மொழியில் கல்வி பயிலுவதின் பயன்களை உணர்ந்து, பயிற்றுவிக்கவேண்டும்.
வகுப்புக்கு வெளியிலும் கற்றலுக்கு வழி வகுக்க வேண்டும்.
இசை, ஓவியம், சிறு கவிதை போன்ற கலை யமைப்புகளை பயன்படுத்தி கற்பிக்க வேண்டும்.
அந்தப் பகுதிக்குள்ள பிரச்சினைகளை அறிந்து தீர்க்க முயலவேண்டும்.
சமுதாயத்திற்கு பயனுள்ளவற்றை எப்படி உரு வாக்குவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தனித்து இயங் காது, முடியும் போதெல்லாம் பிற கல்வி நிறுவனங் களுடன் கருத்து பரிமாறி கூட்டாகவும் சிந்திக்க வேண்டும், செயல்முறை கல்வியில் கவனம் கூடுத லாக செலுத்தவேண்டும்
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சூழலியல் பொறுப் புணர்வு மற்றும் பாடத்திட்டத்தில் பசுமை நடை முறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் இப்பல்கலை கழகம் சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகள் இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்கு வழி வகுத்தன.
இந்த விருது இப்பல்கலைக்கழகத்தின் முயற்சி களை அங்கீகரிப்பது மட்டுமல் லாமல், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பிற பங்குதாரர் களின் கூட்டு அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப் புக்கான சான்றாகவும் விளங்குகிறது.
இப்பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பும் தொடர்ந்து ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற் படுத்துவதோடு, கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றில் நிலையான நடை முறைகளை பின்பற்ற மற்றவர்களை ஊக்குவிக்கும் என்பதில் அய்யமில்லை.