ஜி.எஸ்.டி. வரி அல்ல… வழிப்பறியே! முதலமைச்சரின் சமூக வலைத்தள பதிவு

1 Min Read

சென்னை,ஏப்.16- தி.மு.க. தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

“ஜி.எஸ்.டி. வரி அல்ல… வழிப்பறி!
“தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று குஜராத்தின் முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரா னதும், “ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந் திரம்’’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார்.
பேச நா இரண்டுடையாய் போற்றி!
ஓட்டல் முதல் இரு சக்கர வாகனம் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சி யாக இருக்க ஓட்டலுக்குச் சென்றால், ஙிவீறீறீ-இல் உள்ள GST-யைப் பார்த்து புலம்புகின்றனர்!
அடுத்து என்ன, செல்ஃபி எடுத் தாலும் GST கட்ட வேண்டுமா?
ரூ.1.45 லட்சம் கோடி கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகை யில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித் தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப் படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக் கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிக மாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்.
ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *