காஞ்சிபுரம், ஏப். 11- ‘திராவிட மாடலை”ப் பற்றி பேசி அய்.நா.சபையை அதிர வைத்த தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இடை நிலை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் கீதாகுமாரி. இவர் கடந்த 25 ஆண்டுகளாக பள்ளி வேலை நேரம் தவிர காலை மற்றும் மாலை யிலும் அருகிலுள்ள பழங்குடி இன மக்கள் வசிக்கும் கிராமங் களுக்குச் சென்று அங்குள்ள குழந் தைகளுக்குப் பாடம் நடத்தி வருகிறார். அதோடு அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு, உடை, புத்தகம் உள்ளிட்ட அத்தியாவ சியப் பொருட்களை தன்னுடைய சொந்தப் பணத்திலும், சில தொண்டு நிறுவனங்களின் உதவி யோடும் வாங்கி உதவி வருகிறார்.
இந்த நிலையில் புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை என்ற உல களாவிய தொண்டு நிறுவனத் தோடு இணைந்து தமிழ்நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கும், மாண வர்களுக்கும் உதவி செய்து வரு கிறார். கரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக் குறையின் நிலை யறிந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் கான்சன்ரேட்டுகளை வழங்கி நூற்றுக்கணக்கான உயிர் களை பாதுகாத்துள்ளார்.
இவர் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டதைப் பார்த்த உலகளாவிய புத்தர் ஒளி பன்னாட்டு பேரவை இவரை இந்திய அளவில் ஒரே ஒரு நபராக தேர்வு செய்து அய்.நா. சபையில் “பெண்களின் கல்வி மற்றும் மேம் பாட்டு விழிப்புணர்வு” பற்றி பேச வாய்ப்பைக் கொடுத்துள்ளனர்.
அந்த வாய்ப்பை பயன்படுத்தி பெண்களின் முன்னேற்றத்திற்கு எது காரணமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும், எது தடை யாக இருக்கிறது என்பதைப் பற்றி யும், என்ன செய்தால் அவர்கள் முன்னேறுவார்கள் என்பதைப் பற்றியும் அய்.நா.வில் சிறப்புரை யாற்றினார்.
அய்.நா.வில் பேசும் பலருக்கும் மூன்று நிமிடங்களே பேச அனுமதி கொடுக்கப்படும். மிகச்சிறந்த கருத் தாக இருந்தால் அய்ந்து நிமிடங் கள் ஒதுக்கப்படும். ஆனால் கீதா குமாரி அவர்களுக்கு மட்டும் இருபது நிமிடங்கள் ஒதுக்கித் தரப் பட்டது. அதை முழுமையாகப் பயன்படுத்தி, தான் என்ன நினைத் தாரோ அதை வெளிப்படையாக அங்கு பேசினார்.
அப்போது பேசிய அவர், பெண்களின் முன்னேற்றத் திற்கும், பெண்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திராவிட மாடல் அரசு சிறப்பாக சேவையாற்றி வருகிறது என்றும், தன்னைப் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங் கள் நடத்தி வரும் பெண்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும், அமைச்சர்களும் ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்தியா திரும் பிய கீதாகுமாரிக்கு சக ஆசிரியர் கள், தலைமை ஆசிரியர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், சட்ட மன்ற உறுப்பினர்கள், அமைச்சர் கள் உள்ளிட்ட பல்வேறு தரப் பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.