நாக்பூர் நகரம் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு பிறந்த மண். அங்கே போட்டியிடும் வேட்பாளரும் ஒன்றிய அரசின் அமைச்சருமான நிதின் கட்கரி எதிர்ப்பை சமாளிக்க இயலாமல் திணறிவருவதாக ஊடகவியலாளர் அபினய் தேஷ்பாண்டே ‘தி இந்து’ நாளிதழுக்கு தகவல் அளித்துள்ளார்.
உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் செய்துள்ள பணிகளை நினைவுபடுத்தியே பிரச்சாரம் செய்து வரும் கட்கரியால் அவரை எதிர்த்துப் போட்டியிடும் சட்டமன்ற உறுப்பினர் விகாஸ் தாக்கரேயின் பிரச்சாரத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வேலையின்மை, பணவீக்கம் போன்ற பிரச்சினை களால் மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தி காங்கி ரஸுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட, முஸ்லீம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மொத்த வாக்குகளும் சேர்ந்து விகாஸ் தாக்கரேவை வெற்றி பெறச்செய்யும் என்று நம்பப்படுகிறது. அவர் அதிகாரத்தை கைப்பற்றக்கூடும் என்றே காங்கிரஸ் நம்புகிறது.
மோடி அளித்துள்ள காரண்டீகளை நம்பிப் பலனில்லை என்ற நிலைக்கு நிதின் கட்கரி வந்துவிட்டார். தான் நிறைவேற்றிய உள்கட்டமைப்புச் சார்ந்த செயல் திட்டங்கள் பற்றி அதிகமாகப் பேசியே அவர் வாக்குசேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
நாக்பூர் நகரம் முழுவதும் பிரதமர் மோடியின் உருவம் தாங்கிய சுவரொட்டிகள் காணப்படுகின்றன. ஜே.பி. நட்டா, கட்கரி, மகாராட்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் உருவங்கள் அடங்கிய சுவரொட்டிகள் கண்ணில் படவில்லையாம்.
ஆட்சி மாற்றத்தை பரவலாக நாக்பூர் மக்கள் விரும் புவதாலும், எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரின் கை ஓங்கியிருப்பதாலும், கட்கரியின் பாதையில் தடைக் கற்கள் உருவாகியுள்ளன என்கிறார் கட்டுரையாளர் அபினய் தேஷ்பாண்டே.
நாடு முழுவதும் பா.ஜ.க. வேட்பாளர்கள் மோடியின் புகழ்பாடிக் கொண்டிருக்கையில், நாக்பூரில் கட்கரி தன் சொந்த சாதனைகளைப் பற்றியே உரையாற்றி வாக்கு சேகரித்து வருகிறார். மோடியின் புகழைச் சார்ந்து அவருடைய பரப்புரைகள் எங்கும் அநேகமாக இல்லை. “மக்கள் என் பக்கம் தான்” என்று லக்டிபூல் பகுதியில் நடந்த பரப்புரைப் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் சமீபத்தில் முழங்கியுள்ளார்.
கட்கரியை எதிர்த்துப் போட்டியிடும் விகாஸ் தாக்கரே, எவ்வளவு போராடினாலும் மக்கள் கட்கரிக்கே வாக்களிப்பாளர்கள் என்று அவருடைய சில ஆதரவாளர்கள் கூறிவருவதையும் காண முடிகிறதாம்.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் தலைமைச்செயலகம் போல் நாக்பூர் விளங்கினாலும், நாடு சுதந்திரம் அடைந்தபோதிலிருந்து அது காங்கிரஸின் கோட்டையாகவே இருந்துள்ளது. ஆனால் 2014இல் மோதி அலையாலும், மாற்றம் வேண்டும் என்ற விருப்பத்தாலும் மனம் மாறி நாக்பூர் வாக்காளர்கள் கட்கரியை சுமார் மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர். காங் கிரஸ் வேட்பாளர் விலாஸ் முட்டம்வார் தோல்வியைத் தழுவ நேர்ந்தது. 2019-ஆம் ஆண்டும் கட்கரி வெற்றி வெற்றார்.
தற்போது காங்கிரஸ் மேனாள் மேயரும், சட்ட மன்றத்தின் இன்றைய உறுப்பினருமான விகாஸ் தாக் கரேவை கட்கரிக்கு எதிராக தேர்தல் களத்தில் இறக்கியுள்ளது. பா.ஜ.க.வுக்கு இவர் மிகப்பெரிய சவாலாகவே உள்ளார். தாழ்த்தப்பட்டோர்களும், சிறுபான்மையினரும் அதிகம் வாழும் பகுதிகளில் பா.ஜ.க. தன் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளது, சவாலை எதிர்கொள்ள. கும்பி என்னும் சமூகத்தினர் வாக்காளர்களில் பெரும்பகுதியாக உள்ளனர். விகாஸ் தாக்கரேவுக்கு அவர்களுடைய ஆதரவு பெருமளவு கிடைத்துள்ளது. அந்தச் சமூகத்து மக்கள் விகாஸூக்கு ஆதரவாக பேரணிகள் நடத்தி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
ஒதுக்கீட்டு விவகாரத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிருப்தியடைந்துள்ளனர். தாழ்த்தப்பட்ட அமைப்புகளும் முஸ்லீம் வாக்காளர்களும் காங்கி ரஸூக்கு ஆதரவாக திரும்பிவிட்டதால் பா.ஜ.க. எதிர்ப் புகளைச் சமாளிக்க முடியாமல் நாக்பூரில் திணறி வருவதில் வியப்பில்லை.
வி.பி.ஏ; பி.எஸ்.பி; கிமிவிமிவி போன்ற உதிரிக்கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை இந்தத் தொகுதியில் நிறுத்தவில்லை; காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக. வாக்குகள் சிதைவதை தடுப்பதே அவர் களுடைய நோக்கம். காங்கிரஸ் வேட்பாளர் பெரும் பான்மையான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற அவை ஒத்துழைப்பு அளித்துள்ளன.
காங்கிரஸ் உறுப்பினர் சுரேஷ் கோட்போலே கூறுகிறார்: “நிதின் கட்கரியின் கடந்த காலப் பணிகள் பாராட்டுக்குரியவை தான். இருந்தாலும் இப்போது நாட்டிற்கு ஆட்சி மாற்றம் அவசியம், அவசரம்!” என்று. “பா.ஜ.க.வின் எதேச்சதிகாரம் தடுக்கப்பட்டே ஆக வேண்டும்!” என்று அவர் வலியுறுத்தி கூறுகிறார்.
பால் ஸ்வாமி என்னும் காங்கிரஸ் உறுப்பினர் கூறுகிறார்: “வேலை தேடி இங்குள்ள இளைஞர்கள் பலர் மும்பை, அய்தராபாத், புனே போன்ற நகரங்களுக்கு புலம் பெயர்ந்து சென்று விட்டார்கள் – வயதான பெற்றோர்களையும், உறவினர்களையும் இங்கேயே விட்டு விட்டு சென்று விட்டார்கள். எனவே நாக்பூர் நகரமே “முதியோர் இல்லம்” போல் ஆகிவிட்டது!” – என்று “இளைஞர்களின் வாழ்வு மலர, ஆட்சி மாற்றம் நிகழ்ந்தே ஆகவேண்டும். பா.ஜ.க. ஆட்சி முடிவுக்கு வரத்தான் வேண்டும்!” என்கிறார் பால் ஸ்வாமி.
“நிதின் கட்கரி ஆதரிக்கும் பா.ஜ.க. கோயில்களிலும், கும்பாபி ஷேகங்களிலும் அக்கறை காட்டும் கட்சி. மதவாதக் கட்சியான பா.ஜ.க. வுக்கு வேலையின்மை, பணவீக்கம் போன்ற முக்கியமான பிரச்சினைகள் பெரிதாகத் தெரியவில்லை. மதம் சார்ந்த நிகழ்வுகள் மீதே இவர்களுடைய கவனம் உள்ளது. பா.ஜ.க. மக்களுக்கு எதிரான ஒரு கட்சி. அதன் சார்பில் போட் டியிடும் நிதின் கட்கரி அவ்வளவு சுலபமாக இந்த முறை வெற்றி பெற்றுவிடமுடியாது. 2019இல் வெற்றி பெற்றது போல் இப்போது நடக்க வாய்ப்பில்லை” என்று மேலும் உறுதியாகக் கூறுகிறார் பால் ஸ்வாமி.
“நடைபெறவுள்ள தேர்தல், கட்கரிக்கு மிகப்பெரிய சவால் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மக்களின் அதிருப்தி எல்லை மீறி என்றோ போய்விட்டது உண்மை. இம்முறை “மோதி அலை” எங்கும் வீசப் போவதில்லை. அயோத்தி ராமன் கோயில் போன்ற சங்கதிகளால் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. பா.ஜ.க.வுக்கு எதிராக உணர்வுப் பூர்வமாக மக்கள் கொந்தளிக்கத் துவங்கி விட்டார்கள். காங்கிரஸ் வெல்வது உறுதி” என்கிறார் மராட்டி நாளிதழ் ‘லோக்சத்தா’ வின் நாக்பூர் பதிப்பு ஆசிரியர் தேவேந்திர கவண்டே (ஞிமீஸ்மீஸீபீக்ஷீணீ நிணீஷ்ணீஸீபீமீ).
“பத்து ஆண்டுகளுக்குப்பின் நாக்பூரில் நிகழவுள்ள இந்தத் தேர்தல் நிச்சயம் சுவாராஸ்யமான தேர்தல் யுத்தமாகத்தான் இருக்கப் போகிறது” என்கிறார் ‘லோக்சத்தா’ நாளிதழின் ஆசிரியர்.
“வளர்ச்சிகள் பல என்னால் தான்” என்கிறார் ஒரு வேட்பாளர். “முக்கியமான பிரச்சினைகள் தீர்ந்து உண் மையான வளர்ச்சி ஏற்பட வேண்டும்” என்கிறார் இன் னொரு வேட்பாளர். வெற்றி வாகை சூட்டிக் கொள்ளப் போவது யாரென்று போரின் முடிவில் தெரியத்தான் போகிறது” என்றும் கூறுகிறார் நாளிதழ் ஆசிரியர் தேவேந்திர கவண்டே.
நன்றி : ‘தி இந்து’ – 9.4.2024