இஸ்ரேல்-ஹமாஸ் போரில் காசாவில் இதுவரை 33 ஆயிரம் பேர் பலி
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்துவரும் ஹமாஸ் அமைப் பினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போர் இன்னும் சில : நாள்களில் 7ஆவது மாதத்தை எட்டவுள்ளது. இஸ்ரேலின் இடை விடாத தாக்குதல்களால் காசாவில் பலி எண்ணிக்கை நிமிடத் துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் காசாவில் பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டிவிட்டது.