6.4.2024
தி இந்து:
* 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில், அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு கலவரங்களில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது மற்றும் ஹிந்துத்துவா தொடர்பான பாடங் களை கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) நீக்கி உள்ளது.
* எதிர்க்கட்சி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வற்புறுத்தலின் பேரில் தான், மோடி அரசு இலவச கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதற்கு தள்ளப்பட்டது. மோடி அரசின் தவறான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு என காங்கிரஸ் குற்றச்சாட்டு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் நாடு நாசமாகும், – மு.க.ஸ்டாலின்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தேர்தலுக்குப் பின், பிரதமரை இந்தியா கூட்டணி தேர்ந்தெடுக்கும், ராகுல்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வரும் மாதங்களில் உ.பி., அரியானாவில் இருந்து ஏற்கெனவே 1,500 இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் ‘போர் மண்டலம்’ இஸ்ரேலுக்குச் செல்ல உள்ளனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு முறையை ஒழிக்கும்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment