ஆண்டிபட்டி முத்துமாரியம்மன் திருமண மண்டபத்தில் 31.3.2024 அன்று மாலை 6 மணி அளவில் தேனி மாவட்ட துணைத் தலைவர் ஸ்டார் நாகராசன் தலைமையிலும், காப்பாளர் ச. இரகுநாகநாதன், தேனி மாவட்ட தலைவர் ம.சுருளிராஜ், காப்பாளர் டி.பி.எஸ் ஆர் சானார்த்தனன், டி.பி.எஸ் ஆர் அரிகரன், மு.அன்புக்கரசன் முன்னிலையிலும் நடைபெற்றது. தேனி – கம்பம் பகுதிகளில் இருந்து தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். 4.4.2024 அன்று ஆண்டிபட்டிக்கு வருகை தரும் தமிழர் தலைவரை சிறப்பாக வரவேற்பது. தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற தோழர்கள் மாவட்டம் முழுவதும் அதிகமாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.