மாநில உரிமைகளை மீட்க தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பீர்! சென்னை பிரச்சாரக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உரை

viduthalai
2 Min Read

சென்னை,ஏப்.3- சென்னயில் கொளத்தூர், தண்டையார் பேட்டை பகுதியில் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியையும், புரசைவாக்கத் தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனையும் ஆதரித்து, அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (2.4.2024) வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:

கடும் நிதி நெருக்கடியிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை அறி முகம் செய்தார் முதலமைச்சர். இதனால், 3 ஆண்டுகளில் பெண் கள் 460 கோடி தடவை பயணங்கள் செய்துள்ளனர். அதிமுக மேனாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளைக் கொண்டு பாஜக மிரட்டுகிறது.

அதுபோல திமுக அமைச்சர்களை மிரட்ட முடியாது. தமிழ் நாட்டில் இருந்து செலுத்தப்படும் ஜிஎஸ்டி வரியில் ரூ.1 செலுத்தினால் ஒன்றிய அரசு நமக்கு 29 பைசா மட்டுமே திரும்ப தருகிறது. மாநில உரிமை நசுக்கப்படுகிறது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனையை ஒன்றிய அரசு இன்ன மும் கட்டி முடிக்கவில்லை. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல் பாட்டுக்கே வந்துவிட்டது.
தமிழ் மீது பற்றுள்ளவாறு பேசும் பிரதமர், தமிழின் வளர்ச் சிக்கு பணம் ஒதுக்காமல் சம்ஸ் கிருதத்துக்கு ரூ.1,500 கோடி ஒதுக் கியுள்ளார். சமையல் எரிவாயு, பெட்ரோல் எனஅனைத்து விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

அண்மையில் கனமழை பெய்த போது முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரும் களத்தில் இருந்தோம்.தமிழ்நாட்டில் புயல், வெள்ள பேரிடர் காலங்களில் பிரதமர் வரவும் இல்லை. ஒரு பைசாகூட நிதியும் தரவில்லை. இதை எதிர்க் கட்சித் தலைவர் தட்டிக் கேட்க வில்லை.

எண்ணூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படும், துறைமுகம் தொகுதியில் துணை மின்நிலையம் அமைக்கப்படும், வில்லிவாக்கத்தில் புதிய பன்னோக்கு மருத்துவமனை கட்டப்படும், விடுபட்ட இடங் களில் மழைநீர் வடிகால் அமைக்கப் படும், வீட்டு மனைப்பட்டாவும் வழங்கப்படும்.

இதுபோல பல்வேறு வாக்குறு திகளை அளித்துள்ளோம். ஜூன் 3ஆம் தேதி மேனாள் முதலமைச்சர் மறைந்த கலைஞரின் பிறந்தநாள். ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை. அதில், 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று அவருக்கு பரிசாக அளிக்க வேண்டும்.

வடசென்னை, மத்திய சென் னையைத் தொடர்ந்து தென் சென்னை திமுக வேட்பாளர் தமி ழச்சி தங்கபாண்டியனை ஆதரித் தும் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *