தமிழ்நாடு அரசின் மகளிர் நல பணி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளில் நிதி உதவி

viduthalai
2 Min Read

சென்னை, ஏப். 2- டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி இனிமேல் 3 தவ ணைகளாக வழங்கப்படும் புதிய நடைமுறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் டாக் டர்முத்துலட்சுமி ரெட்டி மகப் பேறுநிதியுதவி திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட் டத்தில் கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண் விவரங்களை தெரிவித்து, பெயரை பதிவு செய்து,பிக்மி’ எண் பெற்ற வுடன் ரூ.2 ஆயிரம் வங்கிக் கணக் கில் வரவு வைக்கப்படும். இதனைத் தொடர்ந்து, நான்காவது மாதத் துக்குப் பின்னர் இரண்டாவது தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.

இதற்கிடையில், உடல் திறனை மேம்படுத்தும் வகையில் சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், உலர் பேரீச்சை, பிளாஸ்டிக் கப், பக் கெட், ஆவின் நெய், அல்பெண்டா சோல் மாத்திரை, கதர்துண்டு அடங்கிய ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பெட்டகம் இரண்டு முறை வழங் கப்படுகின்றன. அரசு மருத்துவ மனையில் பிரசவம் முடிந்தவுடன் மூன்றாவது தவணையாக ரூ.4 ஆயிரம், குழந்தைக்கு தடுப்பூசி போடும் காலத்தில் 4ஆவது தவ ணையாக ரூ.4 ஆயிரம், குழந்தைக்கு ஒன்பதாவது மாதம் முடிந்தவுடன் அய்ந்தாவது தவணையாக ரூ. 2 ஆயிரம் என ரூ.14 ஆயிரம் ரொக் கம் மற்றும் ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள பெட்டகம் என ரூ.18 ஆயிரம் மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதுவரை தமிழ்நாடு முழுவதும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.11,702 கோடி நிதி 1.14 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டுள் ளது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப் படும் அத்திட்டத்தில் தற்போதுசில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட் டன. அதனடிப்படையில், இதற்கு முன்பு வரை 5 தவணைகளாக வழங் கப்பட்டு வந்த ரூ.14,000 நிதியுதவி இனி 3 தவணைகளில் வழங்கப்படவுள்ளது. கர்ப்பகாலத்தின் நான்கா வது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்தநான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 9ஆவது மாதத்தில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது.
அதேபோல், பேறு காலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதங்களில் இரு முறை ஊட்டச் சத்து பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த புதிய நடைமுறை ஏப். 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *