மதுரை,மார்ச் 28- தாங்கள் செய்த சாதனைகளின் பட்டியலைத் துண்டுப் பிரசுரமாக வெளியிட்டு, வாக்கு சேகரிப்போரி டையே, சற்று மாறுத லாக, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்க டேசன், கடந்த 5 ஆண்டுக ளில் அவர் செய்த பணிகள் குறித்த தகவல்களை ‘5 ஆண்டு கள் 150 வெற்றிகள்’ என்ற தலைப்பில் தொகுத்து ஒரு சிறு நூலாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது.
மக்களவையில் ஆங்கி லத்தில் கேட்கப்படும் கேள் விகளுக்கு அமைச்சர்கள் ஹிந்தியில் பதில் அளிக் கும் நடைமுறையை எதிர்த்து, 2020இல் சென்னை உயர் நீதிமன் றத்தில் வெங்கடேசன் வழக்குத் தொடுத்தார்.
அந்த நடைமுறையா னது ஆட்சிமொழிச் சட்டத் துக்கு எதிரானது என நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
வெங்கடேசன், தொகுதி மேம்பாட்டுக்கா கச் செய்த பணிகளோடு, இத்தகைய சட்டப் போராட்டங்களும் நூலில் சீரிய முறையில் தொகுக்கப்பட்டிருக்கின் றன; ‘மக்கள் ஊழியன்’ என்கிற பெயரில் அவரது பணிகள் குறித்த ஆவணப் படமும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.