தகுதித் தேர்வுக்கான அளவு இல்லை-‘நீட்!’ ஒன்றிய அரசே ஒப்புக் கொண்டுள்ளது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Viduthalai
3 Min Read

அரசியல்

சென்னை, செப். 24 –  நீட் தேர்வு தகுதிக்கான தேர்வு இல்லை என ஒன்றிய அரசே தற்போது ஒப்புக் கொண்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு புறநகர் மகப்பேறு மருத்துவ மனையில் இதய தடுப்பு ஏற் பட்டு, பேஸ்மேக்கர் கருவி பொருத்தி சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்ட மணிமாலா மற்றும் அவரது குழந்தையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 22.9.2023 அன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது, வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்த மருத்து வக் குழுவினரை பாராட்டினார். பின்னர், ரூ.17 லட்சம் செலவில் டிஜிட்டல் நுண்கதிர் பரிசோ தனை கருவியை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராயபுரத்தில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை சென் னையின் அடையாளமாக உள் ளது. 72 ஆண்டுகளாக மிகச் சிறப்பான சேவையாற்றி வரு கிறது. இங்கு ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் டிஜிட்டல் நுண் கதிர் பரிசோதனை கருவி பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மார்பகப் புற்றுநோய் உள்ள 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டிற்கு ஒருமுறையும் மார் பகப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள முடியும். இந்த மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களாக மகப்பேறு இறப்பு என்பது இல்லாத வகையில் சாத னைப்  படைக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மாதமும் ஆயிரம் பிரசவங்கள் இங்கு நடக்கின்றன. மேலும், இந்த மருத்துவமனைக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப் பட்டு வருகிறது. ரூ.30 கோடி செலவில் ஒரு கட்டடம் கட்டப் பட்டு வருகிறது. அது விரைவில் திறந்து வைக்கப்படும்.

‘நீட்’ தேர்வு தகுதிக்கான தேர்வு இல்லை என ஒன்றிய அரசே தற்போது ஒப்புக் கொண் டுள்ளது. முதுகலை மருத்துவ இடங்களை நிரப்பும்போது நீட் தேர்வில் பூஜ்ஜியத்திற்கு குறை வான மதிப்பெண் எடுப்பவர் களுக்கும் இடம் கிடைக்கும் என ஒன்றிய அரசு தற்போது தெரிவித்துள்ளது.

இந்த காரணத்தால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்குப் பெற முயற்சி மேற்கொண்டு வருகி றார். நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளில் இதுதொடர்பாக எடுத்துரைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சி யில், சட்டமன்ற உறுப்பினர் அய்ட்ரீம் மூர்த்தி மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண் டனர்.

சென்னை அடையாறு, பெசன்ட் நகரில் 22.9.2023 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெங்கு விழிப் புணர்வு கண்காட்சி மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வீடு களுக்கு நேரில் சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர் பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பிளிச்சீங் பவுடர் பாக்கெட்டுகளை வழங் கினார்.

இதேபோல, ‘ஆரோக்கிய மான நடைப்பயணம்’ திட் டத்தின் கீழ், பெசன்ட் நகரில் 8 கிலோமீட்டர் தூரம் நடைபா தையை தேர்வு செய்ய ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அமைச்சர் மா.சுப் பிரமணியன்கூறியதாவது:- டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய் பாதிப்புகளி லிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் கொசு ஒழிப்பு நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன.  இந்திய மருத்துவ முறை மருந்துகளான நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளி இலைச் சாறு போன்றவை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்க ளிலும் இருப்பில் வைக்கப்பட் டுள்ளது. இந்த ஆண்டில் இது வரை 4 ஆயிரத்து 227 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, தற்போது 343 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 பேர் இறந்துள்ளனர். சென்னையில் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு கட்டட உரிமையாளர்களுக்கு ரூ.14 லட்சத்து 87 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அவரவர் வீட்டு வாசல்களில் தண்ணீர் தேங்குவதை தடுத் தாலே டெங்கு பாதிப்பு வராமல் தடுக்கலாம். மருத்துவமனை களில் குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவர்கள் வருகிறார்களா என்றும் கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில், மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப் பினர் அசன் மவுலானா, மாநக ராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *