சுங்கச்சாவடிகளை ஒழிக்க வேண்டும் என்ற குரல் ஒருபக்கம்;
ஒன்றிய பி.ஜே.பி. அரசு சொல்கிறது தமிழ்நாட்டில் மேலும் 20 சுங்கச் சாவடிகளாம்!
சென்னை, மார்ச் 27- தமிழ்நாட்டில் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் மேலும் புதிதாக 20 சுங்கச்சாவடிகள் திறக்கப் பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட் டில் அதிகப்படியான சுங்கச் சாவ டிகள் இருப்பதாக நீண்ட கால மாகவே மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
ஒன்றிய பாஜக அரசானது, நாட்டிலேயே மிக அதிகமான சுங்கச் சாவடிகளைத் திறந்து தமிழ் நாட்டு மக்களை வஞ்சித்து வருகிறது. தமிழ் நாட்டில் மொத்தம் 65 சுங்கச் சாவடி கள் உள்ளன. அவற்றில், 12 சுங்கச் சாவடிகள் கடந்த மூன்று ஆண்டு களில் திறக்கப்பட்டவை ஆகும். கடைசியாக திருப்பூர் அவினாசி பாளையம் தேசிய நெடுஞ்சாலை 381இல் வேலம்பட்டி சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு, அது மார்ச் 1 முதல் செயல்பட்டு வருகிறது.
அதற்கு முன்பு மதுரை செட்டி குளம் நத்தம் துவரங் குறிச்சி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 785இல் உள்ள பரளி புதூர் சுங்கச்சாவடி பிப்ரவரி 8 முதல் செயல்படத் தொடங்கியது.
அங்கே கடந்து செல்லும் நான்கு சக்கர வாகனம் ஒரு முறை செல்ல ரூ. 180 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
மாநிலத்தில் வேறு எந்த சுங்கச் சாவடியிலும் இந்தளவுக்கு அதிக கட்டணம் இல்லை. இதனால் ஆத்தி ரமடைந்த வாகன ஓட்டிகள் 6.3.2024 அன்று இந்த சுங்கச் சாவடியை சூறையாடினர். இப்படிப் பல இடங்களில் ஏற்கெனவே சுங்கச் சாவடிகளுக்கு கடும் எதிர்ப்பு இருக் கும் போதிலும் புதிய சுங்கச் சாவடி களைத் திறக்க நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.
பெங்களூரு, – சென்னை எக்ஸ் பிரஸ் சாலையில் 6 சுங்கச் சாவடி கள், சித்தூர்,- தச்சூர் விரைவுச் சாலை, விக்கிரவாண்டி,- சோழபுரம்,- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை 36இல் தலா மூன்று சுங்கச்சாவடிகள் எனப் புதிதாக 20 சுங்கச் சாவடி களைத் திறந்து மக்களை கொள் ளையடிக்கத் திட்டமிட்டுள்ளது.
அடுத்த 2 அல்லது 3 ஆண்டுக ளில் இந்த சுங்கச் சாவடிகளைத் திறக்க நெடுஞ்சாலைகள் ஆணை யம் முடிவு செய்துள்ளது. இது பய ணிகளை, குறிப்பாக லாரி உரிமை யாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக் கியுள்ளது.
“லாரி ஓட்டுநர்களிடம் ஆண் டுக்கு ஒரு முறை கட்டணம் வசூ லிக்க வேண்டும் என நாங்கள் விடுத்த கோரிக்கையை அரசு இது வரை ஏற்கவில்லை.
தேர்தல் காலங்களில் இவர்கள் அளிக்கும் வாக்குறுதி களை நம்ப முடியாது. ஏனென்றால் நிதின் கட் காரி சாலை அமைக்கச் செல வான தொகையைத் திரும்பப் பெற்ற சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிக ளையும் 60 கி.மீ. சுற்றளவில் இரு சுங்கச் சாவடிகள் இருந்தால் அதை யும் நீக்குவோம் என்றார்.
ஆனால், இரண்டு வாக்குறுதி களும் நிறைவேற்றப்படவில்லை. கட் காரி இப்போது ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்ட ணத்தை வசூலிப் போம் என்கிறார். இதனால் நெடுஞ்சாலையைக் கடக்கும் அனைத்து வாகனங்களும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
இது அனைவருக்கும் பெரும் சுமையாக இருக்கும். குறிப்பாக லாரி ஓட்டுநர்களுக்கு இது கூடுதல் சுமையைத்தான் தரும்” என்று லாரி ஓட்டுநர்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.