
சேலம், மார்ச் 24– திராவிடர் கழக தொழிலாளரணி கலந்துரையா டல் கூட்டம் 21.3.2024 வியாழன் காலை 11.30 மணிக்கு சேலம் மாவட்ட தொழிலாளரணி அலு வலகத்தில் மாவட்ட தலைவர் கே.எம். கணேசன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ஜெ. கரு ணாகரன் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார்.
தலைமை கழக அமைப்பா ளர்கள் கா.நா. பாலு, அ.சுரேசு சேலம் மாவட்ட கழக தலைவர் அ.ச. இளவழகன், செயலாளர்
பா.வைரம், ஆத்தூர் மாவட்ட செயலாளர் நீ. சேகர், ஆகியோர் முன்னிலையேற்றனர்.
தொழிலாளர் பேரவை தலை வர் கருப்பட்டி கா. சிவா நலவா ரியம் வழங்கும் சலுகைகள் குறித்து எடுத்துக் கூறினார்.
மாநில தொழிலாளரணி செய லாளர் திருச்சி மு. சேகர் அவர்கள் பேசுகையில்:
தொழிலாளரணி அமைப்பின் நோக்கங்களை எடுத்துக்கூறி பொதுமக்களிடையேயும் தொழி லாளர்களிடம் அமைப்பை கொண்டு சேர்ப்பதால் அவர்க ளுக்கு கிடைக்கும் பலன்களும் அதனால் இயக்கத்திற்கு கிடைக் கும் பெருமைகளும் மேலும் மாவட்டத்தில் இயக்கமும் வளர்ச் சியடையும் என்பன போன்ற பல கருத்துக்களை எடுக்கூறினார்.
மற்றும் தோழர்களின் கேள்வி களுக்கும் பதிலளித்து அவர்களின் சந்தேகங்களை தீர்த்துவைத்தார்.
இறுதியாக ஆத்தூர் மாவட்ட தொழிலாளரணி தலைவர் மோகன் ராஜ் நன்றி கூறி கலந்துரையாடல் கூட்டத்தினை நிறைவு செய்தார்.
இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாநகர, பகுதி கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர் கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
