24.3.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை
பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயக அமைப்பு முறை இருக்காது: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை குடியரசுத் தலைவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: கேரள அரசின் அசாதாரணமான நடவடிக்கை
இந்தியன் எக்ஸ்பிரஸ்
மக்களவை தேர்தலில் குஜராத் சபர்கந்தா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக பிகாஜி தாகூர் அறிவிக்கப்பட்டிருந்தார். திடீரென போட்டியில் இருந்து தான் விலகுவதாக அவ்வேட்பாளர் அறிவித்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வதோதரா பா.ஜ.க. வேட்பாளர் ரஞ்சன்பென் தனஞ்ஜெய் பட்டு விலகுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
பா.ஜ.க.வின் மும்பை வடக்கு மக்களவை வேட்பாளரான ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலின் மகன் துருவ் கோயலின் உரையாற்றும் கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு தங்களை வற்புறுத்தியதாக மும்பை கல்லூரி க மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தி இந்து
ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்டு மற்றும் ரெய்டுக்கு பிந்தைய லஞ்சம் உட்பட நான்கு ‘ஊழலின் வடிவங்களில்’ தேர்தல் பத்திரங்களை பா.ஜ.க. பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு. ஊழலை வங்கி வழியே பா.ஜ.க. செய்துள்ளது என தாக்கு.
-குடந்தை கருணா