பாடகர் டி.எம். கிருஷ்ணாகுறித்த ஆசிரியரின் அறிக்கை

viduthalai
2 Min Read

22.3.2024 ‘விடுதலை’ நாளிதழில் இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கியுள்ளது தொடர்பான சர்ச்சைகளையும் அதற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் விளக்க அறிக்கையையும் படித்தேன்.
பார்ப்பனர்களைக்குறித்த விவாதம் நடைபெறும் போதெல்லாம் “இப்ப எங்கே அவர்கள் முன்ன மாதிரி இருக்காங்க;இப்பெல்லாம் அவங்க ஜாதி பார்க்கிறது இல்லை,ரொம்ப திருந்திட்டாங்க” என்று நம்மவர்களே சப்பைக்கட்டு கட்டுவார்கள்.தந்தை பெரியார் சொன் னது போல் “புலி தன் வரிகளை மாற்றிக்கொண்டாலும் பார்ப்பனர்கள் தங்கள் குணத்தை மாற்றிக்கொள்வது இல்லை” என்பதை பாடகிகள் ரஞ்சனி, காயத்திரி இருவரின் அமில வார்த்தைகளில் வெள்ளிடை மலையாக விளங்குகிறது!
கர்நாடக இசை உலகம் புதுக்காற்று புகமுடியாத மியாஸ்மா (விவீணீsனீணீ) நிரம்பிய இறுக்கமான உலகம் என்பது 1946க்கு பிறகு 78 ஆண்டுகளுக்கு பிறகும் நிரூபணம் ஆகி இருக்கிறது‌.
உலகம் முழுக்க இசையானது ஆதிக்க, அடக்கு முறை சக்திகளிடமிருந்து வெடித்துக் கிளம்பி சாதாரண மனிதர்களை சென்றடையத்துவங்கி விட்டது‌.இதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இசை உலகின் உயரிய விருதான கிராமி விருது மக்கள் இசைக்கலைஞர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட நிகழ்வு!
ஆனால் கர்நாடக இசை உலகம் தனது இறுக்கமான பிடியிலிருந்து இசையை இன்னும் விடுவிக்காமல் ‘தீட்டாயிடுத்து’ மனநிலையிலேயே இருக்கிறது.அத னால்தான் இசையை சேரிகளுக்கு எடுத்துச்சென்ற கலைஞர் டி.எம். கிருஷ்ணாவை கரித்துக் கொட்டு கிறார்கள். அவர் தந்தை பெரியாரை சிலாகித்தது அவர்களுக்கு பொறுக்கவில்லை! அதனால்தான் பொறுமையை இழந்து, சிந்திக்கும் ஆற்றலை இழந்து, வரலாற்றை மறந்து முயலுக்கு மூன்று கால் மனப் பான்மையிலேயே இருக்கிறார்கள்!
பார்ப்பனர்களின் பிரபலமான ‘கல்கி’ஆர்.கிருஷ்ண மூர்த்தி தனது இல்லத்திருமணத்திற்கு தந்தை பெரியாரை அழைத்திருக்கிறார் என்பதும் “நான் எப்போதும் கருப்புச்சட்டையோடுதான் இருப்பேன்.திருமணத்தின்போது கருப்புச்சட்டையோடு ஒருவர் இருப்பதை உங்கள் பெண்கள் விரும்பமாட்டார்கள், அதனால் திருமணம் முடிந்தபிறகு வருகிறேன்”என்று தந்தை பெரியார் பதிலிறுத்ததையும் ரஞ்சனிகளும் காயத்திரிகளும் அறியமாட்டார்கள். அதுமட்டுமா? பெரியாரை பார்ப்பன இனப்படுகொலையாளியாக சித்தரித்த இவர்கள் காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு பார்ப்பனர்கள் பூண்டோடு அழிக்கப்பட இருந்த நிலையை மாற்றியவர் தந்தை பெரியார்தான் என்பதையும் அறியமாட்டார்கள்!
1953இல் ராயபுரத்தில் பிராமண இளைஞர்கள் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசியதை இந்த நேரத்தில் அப்படியே எடுத்துப் போட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எப்போதும் ஆதாரத்தோடும் புள்ளி விவரங்களோடும், ஆணித்தரமாகவும் சொல் வார் என்பதை எடுத்துக் காட்டியுள்ளார் !
நாங்கள் பார்ப்பனியத்திற்குத் தான் எதிரி, பார்ப்பனர்களுக்கு அல்ல என்பதை நித்திய பூசையாக சொல்லிக்கொண்டேதான் இருக்கவேண்டும் போலி ருக்கிறது! இல்லையெனில் புதிது புதிதாக ரஞ்சனிகளும் காயத்திரிகளும் தோன்றுவார்களே?

– கோ.அழகிரிசாமி
செம்பனார்கோயில்

Share This Article
1 Comment
  • கலையும் இலக்கியமும் சாதிமத,மொழி,இன அடையாளங்களை தாண்டி அனைத்து மக்களுக்குமானது,
    மக்களின் மேன்மைக்கானது.
    எனவே டி.எம்.கிருஷ்ணா என்ற மகத்தான கலைஞனை அவதூறு செய்யும் நோக்கில் செய்யப்படும் அவதூறு பிரச்சாரத்திற்கு எதிராக மானுட சமூகம் ஒன்றிணைய வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *