ஆசிரியர் அவர்கட்கு செந்தமிழ்க் கொற்றி (தமிழ் மறவரின் மகள்) எழுதும் முடங்கல். இருபாலும் நலங்கள் தழைக.
உடையார்பாளையத்தில் 10.3.2024 அன்று முப்பெரும் விழா மிகவும் சிறப்பாக, இனிதே நடைபெற்றது. அன்னை மணியம்மையாரின் 105ஆவது பிறந்த நாள் விழாவும், தமிழ்மறவர் கீ.வை. பொன்னம்பலனார் மற்றும் உடையார் பாளையம் ஆசிரியர் வேலாயுதம் ஆகியோரின் தொண்டறப் பாராட்டு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மூவர்க்கும் படம் திறந்தும் – நூல் வெளியிட்டும், குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து நினைவுப் பரிசுகள் அளித்தும், பொன் னாடைப் போர்த்தியும் சிறப்பிக்கப்பட்டார்கள் என்பதை எண்ணி தமிழ் மறவர் கீ.வை. பொன்னம்பலனார் அவர்களின் குடும்பத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.
தமிழ்மறவர் மகள் செந்தமிழ்க் கொற்றி
தொண்டறப் பாராட்டுக்கு நன்றி
Leave a Comment