சென்னை,மார்ச் 23- தேர்தல் ஆணையத்தின் வரை முறைகளுக்கு எதிராக, 2-ஜி வழக்கு குறித்து தவறான பிரச்சாரம் செய்வதாக பா.ஜனதா மீது நடவ டிக்கை எடுக்கவேண்டும் என தி.மு.க. அமைப்புச் செயலாளர் தேர்தல் ஆணையருக்கு புகார் தெரிவித்துள்ளார்.
2-ஜி வழக்கு பரப்புரை
இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு. தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-
பா.ஜனதா கட்சி, அதன் ‘எக்ஸ்’ சமூக வலைத்தள பக்கத்தில் 2-ஜி வழக்கு சம்பந்தமாக ஒரு பொய்யான பிரச்சாரத்தை முன்னெடுத்து இருக்கிறது. வாக்காளர்கள் 2-ஜி வழக்கு குறித்து கேள்வி கேட்பது போல விஷமப் பிரசாரம், நாடாளுமன்ற தேர்தலையொட்டி கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட நாளிதழ் செய்தியை குறிப்பிட்டும் 2-ஜி விவகாரத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான ஆ.ராசா ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளதாகவும், நாட்டுக்கு பேரிழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். புல்னா மேட் என்று ஒருபெயரில் பதிவிட்டு அதில் வாக்காளர்களின் கருத்துகளையும் கேட்டு வருகிறார்கள்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
2-ஜி வழக்கில் ஆ.ராசா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று வழக்கை விசாரித்த நீதிமன்றம் கூறி, அவரை விடுதலை செய்துள்ளது.
ஆனால் அந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் வகையில், பா.ஜனதாவின் இந்த விஷமப் பிரசாரம் இருந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இது போன்றமுறைகேடான, சட்ட விரோத மான பிரசாரத்தை பா.ஜனதா மேற்கொண்டிருக்கிறது.
இது தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதி முறைகளுக்கு முரணானது. இதுபோன்ற தவறான பிரசாரத்தை, ஜனநாய கத்துக்கு விரோதமான, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான,தேர்தல் ஆணையம் வரைமுறை களுக்கு எதிரான பிரச்சாரத்தை பா.ஜனதா மேற் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
எனவே, பா.ஜனதா மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், தேர்தல் மாண்புகளை காப்பாற்றுமாறும் தேர்தல் ஆணை யத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறோம். – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.