செய்யாறு, செப். 25- செய்யாறு நகரில் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன் னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன், மேனாள் அமைச் சர் முக்கூர் என். சுப்பிரமணியன் தலைமையில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. நிகழ்ச்சியில் நகர அவை தலைவர் ஜனார்த்தனன், பொதுக் குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் வெங்கடேசன், மேனாள் நகர மன்ற உறுப்பினர்கள் அருணகிரி, கோபால், செந்தில், அருகாவூர் ரங்கநாதன், மகேந்தி ரன், விமலா மகேந்திரன், வழக்குரைஞர் முனுசாமி, டீக்கடை சரவணன் மற்றும் கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப் பட்டு விழாவை சிறப்பித்தார்கள்.
பொக்கே சமுத்திரம்
செய்யாறு கழக மாவட்டம் வெம்பாக்கம் ஒன்றியம் பொக்கே சமுத்திரம் கிராமத்தில் கழக உறுப் பினர் பரந்தாமன் தலைமையில் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு இனிப் புகள் வழங்கப்பட்டன.பெரியார் பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள். கிராம மக் கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.