நாகை, மார்ச் 20– நாகப்பட் டினம் மாவட்டம் ஒக்கூர் கிளைக் கழகக் கூட்டம் 17.3.2024 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் பாவா.ஜெயக்குமார் தலைமை ஏற்க ஒக்கூர் இரா.ராஜேந்திரன் ஒன் றிய விவசாய தொழிலா ளரணி செயலாளர் முன் னிலையில் நடைபெற்றது.
இயக்க வளர்ச்சியை யும் இயக்க நிகழ்வுகளில் கழகத் தோழர்கள் அனை வரும் பங்கேற்க வேண் டும், விடுதலை சந்தா சேர்ப்பு – பாசிச பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப களப் போராட் டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது எதிர்வரும் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய திராவிடர் கழகம் சார்பில் கடுமை யாக உழைப்பது போன் றவை குறித்து விவாதிக் கப்பட்டது.
கூட்டத்திற்கு நாகை மாவட்ட திராவிட கழ கத்தின் தலைவர் வி.எஸ். டி.ஏ. நெப்போலியன், நாகை மாவட்ட செயலா ளர் ஜெ. புபேஷ் குப்தா, நாகை மாவட்ட விவசாய தொழிலாளர் அணியின் செயலாளர் இரா.இராம லிங்கம், மாவட்ட இணை செயலாளர் ரெ.துரை சாமி, மாவட்ட மாணவர் கழக தலைவர் மு.குட்டி மணி, கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் ரெ.பாக்கிய ராஜ், கீழ்வேளூர் நகர தலைவர் அ.பன்னீர்செல் வம், பொதுக்குழு உறுப் பினர் ந.கமலம் மற்றும் ஒக்கூர் கிளை கழக தோழர் கள், மகளிர் அணி தோழர் கள் கலந்து கொண்டனர்.