மேடையில் மருத்துவர் ராமதாஸ் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஓ.பி.எஸ்.- ஓ.பி.ஆர், டி.டி.வி.தினகரன் என்று வரிசையாக வாரிசுகளை அமர வைத்துக் கொண்டும், அமித்ஷா, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் முதல் எடியூரப்பா வரை தத்தமது வாரிசுகளைத் தங்கள் கட்சியிலேயே வைத்துக் கொண்டு வாரிசு அரசியல் பற்றிப் பேசுவதும்… மோடியின் புரட்டுப் பேச்சா? இல்லை யாரும் கேட்க மாட்டார்கள் என்ற அசட்டுத் துணிச்சலா?