சென்னை, மார்ச் 19- திராவிட இயக்க சிந்தனையாளர் சுயமரி யாதைச் சுடரொளி கயல் தின கரன் அவர்களின் நினைவேந் தல் படத்திறப்பு நிகழ்ச்சி 17.3.2024 அன்று மாலை இராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை-இராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது.
நினைவேந்தல் நிகழ்ச்சியில் தொடக்கமாக கயல் தினகரன் மகன்கள் தி.தமிழ்ச் செல்வன் தி.செழியன் ஆகியோர் அனை வரையும் வர வேற்றனர். விஜயா தாயன்பன் கயல் தினகரன் பாடலை பாடினார். நிகழ்ச் சிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தங்கினார்.
படத்தினை திறந்துவைத்து நினைவேந்தல் உரையினை திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், கவிதா பதிப்பகத்தின் உரிமையாளரும், பபாசி தலை வருமான சேது சொக்கலிங்கம், திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், கவிப்பேரரசு வைரமுத்து, திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, தி.மு.க. தலைமைக் கழக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க. கலை இலக்கிய, பகுத்தறிவு பேரவை கழகத்தின் துணைத் தலைவர் தமிழச்சி தங்கபாண்டி யன் எம்.பி, ஆகியோர் கயல் தினகரன் ஆற்றிய சமூக, தமிழ் இலக்கிய பணி, பொதுத் தொண்டினையும் நினைவு கூர்ந்து உரையாற்றினர். திரா விடர் இயக்கத் தமிழர் பேரவை யின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அனை வருக்கும் நன்றி கூறினார்.
திராவிட இயக்க சிந்தனையாளர் கயல் தினகரன் படத்திறப்பு
Leave a Comment