சென்னை, மார்ச் 19- அரசுப் பள்ளிக ளில் மாணவர்கள் சேர்க்கை தொடர் பாக பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ் நாடுஅரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்தி லும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அரசு பள்ளிகளில் கட்டணம் பெறப்படாமல், தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது என் பதை எடுத்துரைத்து மாணவர்கள், சேர்க் கையை அதிகரிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற் கொள்ளவேண்டும்.
மாவட்ட மக்கள் தொடர்பு அலு வலர்களை (றிஸிளி) அணுகி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து, செய்தித் தாள்களில் செய்திகள் வெளியிட வேண்டும்.
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து ஆசிரியர்களை யும் கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி செல்லாக் குழந்தைகளின் பெற்றோர்களை கண்டறிந்து, அறிவு ரைகள் வழங்கி அவர்களின் குழந் தைகளுடன் விழிப்புணர்வு பேரணியில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சிறப்பு கவனம் செலுத்தி மாணவர் எண்ணிக் கையை இரட்டை இலக்கத்திற்கு உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்க ளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்யப் பட வேண்டும்.
பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்பு களில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தை களையும் இடைநின்ற மாணவர் களையும் கண்டறிந்து, அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளுக்கு நிகரான இணையவழி பாட கற்பித்தல் பற்றியும் புலனக்குழு (Whatsapp Group) வழி ஆசிரியர் மாணவர் பாடப் பரிமாற் றங்கள் பற்றியும் பெற்றோர்களுக்கு விரிவாகவும் தெளிவாகவும் தெரிவித் தல் வேண்டும்.
கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றவும் இந்தியாவி லேயே பள்ளி வயது அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்த்து விட்டது தமிழ்நாடு என்று பெருமை அடையும் வகையிலும் விரிவான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு வழிகாட்டு நெறி முறைகளை தமிழ்நாடு அரசு வழங்கி யுள்ளது.