சென்னை, மார்ச் 17- சென்னையில் டாக்டர் கே.சூர்யா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன பயிற்சி மய்யத்தின் மேனாள் முதல்வர் எம்.கே.கருப் பையாவின் மூத்த மகள் டாக்டர் கே.சூர்யா கடந்த 2014ஆ-ம் ஆண்டு மர்ம காய்ச்சலால் திடீ ரென உயிரிழந்தார். அவ ரது நினைவாக டாக்டர் கே.சூர்யா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையை அவரது குடும்பத்தினர் தொடங்கினர். அன்னா ரின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாளன்று ஆதர வற்ற சிறார்கள் மற்றும் முதியோருக்கு ஆண்டுக்கு இருமுறை நலத்திட்ட உதவிகளை இந்த அமைப்பு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்ஒருபகுதியாக மருத்துவர் சூர்யாவின் நினைவு நாளை முன் னிட்டு, சென்னை சூளை யில் உள்ள முதியோர் காப்பகத்தில் தங்கியிருக் கும் ஆதரவற்ற மூதாட்டி களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் எல்அய்சி பயிற்சி மய்ய மேனாள் முதல்வர் எம்.கே. கருப்பையா, சமூக செயற் பாட்டாளர் ஜி.திலகர், டி.சந்தானம், அரும்பாக் கம் கே.வாசுகிநாதன், செயற் பாட்டாளர் டி.சுவி கர் ஜேக் கப், ஆர்.சுரேஷ் குமார் மற் றும் பூர்ணசந்திரன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.