அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் 10.3.2024 அன்று தமிழ்நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
சென்னை கொரட்டூர்
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆவது பிறந்த நாள் விழா சென்னை கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலுவலகத்தில் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 09-00 மணிக்கு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரை யுடன் ஆவடி மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் பா.தென் னரசு அன்னை மணியம்மையார் படத்தை திறந்து வைக்க தோழர் புஷ்பா பன்னீர்செல்வம் இனிப்பு வழங்கினார்.நிகழ் வில் பெருமாள்,செ.ஜெஸ்வந்த், ஆறுமுகம், கருப்பசாமி, அருள் விழியன், கலியமூர்த்தி, சுமதி மணி, கெஜலட்சுமி, சசிகுமார், வழக்குரைஞர் பன்னீர்செல்வம், விஜயபானு, பகல வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் அரிதாஸ் நன்றி கூறினார்.
புதுச்சேரி
புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் 10.3.2024 ஞாயிறு காலை 10.30 மணியளவில் அன்னை மணியம்மையாரின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
அன்னையாரின் உருவப் படத்திற்கு மாநிலத் தலைவர் சிவ.வீரமணி மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி விழா வினைத் தொடங்கி வைத்தார். மாநில எழுத்தாளர் மன்றத் துணைப் பொதுச் செயலாளர் இளவரசி சங்கர் அன்னையின் தொண்டறப் பணிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
விழாவில் மாவட்டத் தலைவர் வே.அன்பரசன், செயலாளர் கி.அறிவழகன், துணைத் தலைவர் மு.குப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர் லோ.பழனி, தொழிலாளரணித் தலைவர் வீர.இளங்கோவன், செயலாளர் கே.குமார், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், புதுச்சேரி நகராட்சி தலைவர் மு.ஆறுமுகம், பா.களஞ்சியம் வெங்கடேசன், வில்லியனூர் கொம்யூன் தலைவர் கு.உலக நாதன், நெட்டப்பாக்கம் கொம்யூன் தலைவர் ஏம்பலம் தமிழ்நிலவன், பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா.குமரன், மகளிரணித் தலைவர் அ.எழிலரசி, ஜே. வாசகி, ஊடக வியலாளர் பெ.ஆதிநாராயணன், மு.வீரமணி, பாஸ்கரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
அவர் கடந்த ஓராண்டில் நடந்து முடிந்த செயல்பாடுகள் மற்றும் எதிர்கால வேலைத் திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்து கூறினார்.
கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கருத்து களை எடுத்துக் கூறினர்.
இறுதியில் மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தோழர்களின் கேள்விகளுக்கும் விரிவான விளக்கம் அளித்து உரை யாற்றினார். அதனைத் தொடர்ந்து பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுச்சேரி மக்களை வஞ்சித்துவரும் ஒன்றிய பாஜக அரசை கண்டிக்கிறோம்
அண்மையில் காலமான நமது கொள்கை உறவுகள் உப்பளம் மா.நெடுஞ்செழியன் (20.12.2023) புரட்சிக் கவிஞர் பெயரன் கோ.செல்வம் (25.12.2023) முதலியார் பேட்டை துரை.சிவாஜி (07.01.2024) கழகத்தின் மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு (22.01.2024) ஆகியோர் மறை
விற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதெனவும், புதுச்சேரி சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி கஞ்சாப் போதை காலிகள் இருவரால் பாலியல் வன்கொடுமை செய் யப்பட்டதோடு கொலையும் செய்யப்பட்டார் என்ற செய்தி பெரிதும் அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும். எனவே புதுச்சேரி அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கொலையாளிகளுக்கு கொடுந் தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களுக்கு உரிய நிவார ணம் வழங்கிட வேண்டும் என்றும், புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி தராமல் தொடர்ந்து புதுச்சேரி மக்களை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசை வன்மையாகக் கண்டிப்பதென்றும் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாசிச பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களைத் தோற்கடிக்கும் வகையில் புதுச்சேரி முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்வ தெனவும், புதுச்சேரியில் சமூக நீதிக்கு எதிரான 10 சதவீதம் EWS இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும், அனைத்து அரசு உயர் பதவிகளிலும் அனைத்து ஜாதியினரும் உரிய இட ஒதுக்கீட்டைப் பெறும் வகையில் ஜாதிவாரி கணக் கெடுப்பை நடத்திட வேண்டுமென ஒன்றிய, மாநில அரசு களைக் கேட்டுக் கொள்வதெனவும், புதுச்சேரியில் ஏற்கெ னவே தெருவுக்கு தெரு பார்கள், பள்ளிக் கல்லூரிகளுக்கு அருகிலேயே கஞ்சா, போதை ஸ்டாம்ப்பு, புகையிலை அதி களவில் விற்பனையில் உள்ளது. அப்படி இருக்கையில் “ரெஸ்டோ பார்” என்றும் “பப்பார்” என்றும் மேலும் கூடுதலாக குத்தாட்டம் போடும் பார்களுக்கு அனுமதி கொடுத்தும், 24 மணி நேரமும் குடிக்கடைகளைத் திறந்து வைத்துள்ள
என்.ஆர்.தலைமையிலான பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். இரவு நேரங்களில் புதுச்சேரி முழுவதும் உள்ள காலி இடங்கள் திறந்த வெளி பார்களாகக் காட்சியளிக் கிறது. பொதுமக்கள் பயம் கலந்த நிலையில் அச்ச உணர் வோடு வாழ வேண்டி உள்ளது. எனவே, புதுச்சேரி காவல் துறை குறைந்த பட்சமாக திறந்த வெளிகளில் குடிப்பதை யாவது தடுத்து கட்டுப்படுத்திட வேண்டுமெனவும், 1.10.2023 முதல் 10.3.2024 வரை கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டம், பொதுக்கூட்டம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வருகை மற்றும் கருத்தரங்குகள் என அனைத்து நிகழ்ச்சிகளின் வரவு செலவுகளும் வாசிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது எனவும், பெரியார் படிப்பகம் சீரமைப்புப் பணிகள் 90 சதவீத அளவிற்கு முடிக்கப்பட்டுள்ளது.
விரைவில் மீதமுள்ள சிறு சிறு பணிகளை நிறைவு செய்து, தோழர்களிடம் நன்கொடை பெற்று அதன்பின் நன்கொடை வழங்கியவர்களின் பெயர்கள் அடங்கியக் கல்வெட்டினைப் படிப்பகத்தில் வைப்பதெனவும், இந்தியாவிலேயே நியாய விலைக் கடைகள் இல்லாத ஊர் புதுச்சேரி ஒன்றிய நிலப்பரப்பு மட்டுமே. எனவே, அதனைப் போக்கிடும் வகையில் மூடியுள்ள நியாய விலைக் கடைகளை உடனடியாகத் திறந்து தமிழ்நாட்டில் உள்ளதுபோல அத்தியாவசியப் பொருட்களை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசைக் கேட்டுக் கொள்வதெனவும், எதிர்வரும் 16.3.2024 அன்று அன்னை மணியம்மையார் நினைவு நாள் கருத்தரங்கம் மகளிரணி சார்பில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள இளைஞரணித் துணைத் தலைவர் ச.பிரபஞ்சன், படிப்பகப் பணிகளைச் சிறப்பாகச் செய்த மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் ஆகியோர்க்கு மாநிலத் தலைவர் சிவ.வீரமணி பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். நிறைவாக இளைஞரணித் தலைவர்
தி.இராசா நன்றி கூறினார்.
மேல உளூர் – உரத்தநாடு
உரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் மேல உளூர் கடைத் தெருவில் அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்தநாள் விழா, “இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்?”, “தெருமுழக்கம் பெருமுழக்கமாகட்டும்” என்ற தலைப்பில் தெருமுனை கூட்டம் 10.03.2024, ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
உரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழக தலைவர் தலையாமங்கலம் இரா.துரைராசு தலைமையேற்று உரை யாற்றினார். உரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் தெற்கு நத்தம் அ.சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் சடையார் கோயில் வெ.நாராயணசாமி, மாநில இளைஞரணி துணை செயலாளர் நெல்லுப்பட்டு முனைவர் வே.இராஜவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் உரத்தநாடு பேபி ரெ.ரமேஷ், மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர் தெற்கு நத்தம் பி.பெரியார்நேசன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரெ.சுப்பிரமணியன், உரத்தநாடு நகர தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், திமுக வெ.கோவிந்தராசு, திமுக வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் ஆர்.பிச்சைவேல் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
திராவிடர் கழக தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.
கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி ‘இந் தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்?’ என்கிற தலைப்பில், பாசிச பாஜக ஆட்சியின் அவலநிலைகளை எடுத்துக் கூறி, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் “இந்தியா” கூட்டணி மாபெரும் வெற்றியை பெற வேண்டும் அப்போதுதான் இந்திய நாடு வளர்ச்சி அடைய முடியும், தமிழ்நாடு தனித்துவம் பெற முடியும் என்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.
மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் ச.சித்தார்த் தன், மாநில ப.க. அமைப்பாளர் கோபு.பழனிவேல், உரத்தநாடு நகர இளைஞரணி தலைவர் பொறியாளர் ச.பிரபாகரன், உரத்தநாடு வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் தலையாமங்களம் கோவி. இராமதாஸ், உரத்தநாடு வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் தெற்கு நத்தம் சு.குமரவேல், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர் மண்டலக்கோட்டை சுரேந்திரன், உரத்தநாடு வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் கண்ணந்தங்குடி இரா.ராஜதுரை, தெற்கு நத்தம் அன்பழகன், தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வம், திமுக கிளை கழக செயலாளர் யு.அறிவழகன், டி.அய்யாவு, வேலாயுதம், பாஸ்கர், சீனிவாசன், ஒப்பந்தகாரர் கார்த்திக், தெற்கு நத்தம் வேம்பையன் மற்றும் கழகத் தோழர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மத்தூர்
கிருட்டினகிரி மாவட்டம் மத்தூரில் மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி சார்பில் அன்னை மணியம்மையார் 105 -ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா திராவிடர் கழக மகளிரணி சார்பில் கருத்தரங்கம் மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் அண்ணா.சரவணன் இல்லத்தில் மாவட்ட மகளிரணி தலைவர் மு. இந்திராகாந்தி தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் கருத்த ரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மகளிரணி நிர்வாகிகள் உண்ணாமலை, ஜெ.காயத்திரி, மா.சிவசக்தி, வெ.செல்வி, ஜெ.பிரியா, வி.வசந்தி, இரா.சவுந்தரி, சு.செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித் தனர். ஒன்றிய மகளிரணி தலைவர் முருகம்மாள் அனை வரையும் வரவேற்றார்.
திராவிடர் கழக மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அன்னைமணியம்மையாரின் தூய தொண் டறப் பணியையும் அவரது செயல்பாடுகளையும் நினைவு கூர்ந்து கருத்தங்க சிறப்புரையாற்றினார்.
கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக தலைமைக் கழக அமைப்பாளர் கோ.திராவிடமணி, மாநில ப.க. துணைப் பொதுச் செயலாளர் அண்ணா.சரவணன், மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத்தலைவர் வ. ஆறுமுகம், மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன், செயலாளர் சே.ஜானிகி ராமன், ஒன்றியத் தலைவர் கி.முருகேசன், செயலாளர் வே. திருமாறன், நகரத்தலைவர் சி.வெங்கடாசலம், அண்ணாமலை, மாவட்ட இளைஞரணி செயலாளர் நா. சிலம்பரசன், மா.திராவிடன், மு.ஜெயரட்சன், சே.இராமசெயம், கு.சுகுமார், சு.நாத்திகன், ஜெ. இரவணன், மா.இரகுநாதன், வெ. பப்பி, இரா.ஜெயகல்யாணி, சி.சங்கீதா, இர.சந்தியா, அ.அம்சா, வே. மாலா, ஜெ.குமிழி, ரஞ்சனி, அர்ச்சனா, இராஜேஸ்வரி, ஹேமாவர்சினி, தாமரை, சங்கீதா, ஜமுனா, நத்தா ஷா, சி.மா.ரூபிகாசிறீ, வெ.தரணி, ர.தென்றல் நிலா, ர. அஞ்சல் ராஜிகா, ஆ.நிறைதமிழ், கா.ஆ. நிறை கதிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிறைவாக மத்தூர் மகளிரணி நிர்வாகி வெ.செல்வி நன்றி கூறினார்.
நிகழ்ச்சி சிறப்புற நடைபெற மாவட்டத் துணைத்தலைவர் வ. ஆறுமுகம், மத்தூர் ஒன்றியத் தலைவர் கி.முருகேசன் ஆகியோர் உறுதுணையாக இருந்து செயலாற்றினர். அவர் களுக்கு தலைமைக் கழக அமைப்பாளர் கோ.திராவிடமணி சால்வை அணிவித்து சிறப்பித்தார். அனைத்து மகளிரணி தோழியர்களுக்கும் மாவட்ட மகளிரணி சார்பில் மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். மருத்துவர் படிப்பை நிறைவு செய்ததோழர் நாத்திகனுக்கு மாவட்ட மகளிரணி தலைவர் இந்திராகாந்தி சால்வை அணி வித்து சிறப்பித்தார்.
நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் புலால் உணவு விருந்து வழங்கி சிறப்பிக்கப்பட்டது. முன்னதாக காலை 10.00 மணியளவில் மத்தூர் பேருந்துநிலையம் அருகில் உள்ள தந்தைபெரியார் சிலை அருகில் அன்னை மணியம்மய்யார் படம் வைத்து மாவட்ட மகளிரணி தலைவர் மு. இந்திராகாந்தி தலைமையில் தோழர்கள் அன்னையார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.