சென்னை, செப்.28 – ஊராட்சிப் பகுதிகளில் வசிப்போர் இணைய வழியில் வரிகளைச் செலுத்துவதற்கான புதிய இணைய தளத்தின் பயன் பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் 26.9.2023 அன்று தொடங்கி வைத்தார்.
கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், உரிமக் கட்டணம் போன்றவற்றை ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, ஊராட்சி செயலர் மூலமோ செலுத்த வேண்டியுள்ளது.
இந்த சேவைகள் அனைத்தும் இணைய தளம் வழியில் பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பொது மக்கள் கிராம ஊராட்சிகளுக்கு வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், வரியில்லாத கட்ட ணங்கள் போன்றவற்றை https://vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளம் வழியில் செலுத் தலாம் என தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.