சென்னை, மார்ச் 13- தமிழ்நாட்டில் 750 சதுர மீட்டர் அல்லது 8 வீடுகள் வரை கட்டப்படும்போது அதற்கு பணி முடிப்பு சான்றிதழ் தேவையில்லை என்பதுடன் கட்ட டத்தின் உயரத்தை 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்துவது தொடர்பாக ஒருங்கிணைந்த கட் டிட விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட் டுள்ளது.
தமிழ்நாடு அரசின் ஒருங்கி ணைந்த கட்டட விதிகளின் அடிப் படையில் தற்போது கட்டிட அனுமதிகள் வழங்கப்பட்டு வரு கின்றன.
மேலும், கட்டி முடிக்கப் பட்ட கட்டடத்துக்கு பணி முடிப்பு சான்றிதழ் பெற்றால்தான் மின் சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப் புகளை பெற முடியும் என்ற நிலை உள்ளது.
இந்த விதிகளை திருத்த வேண் டும் என்று கட்டுமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. இது தவிர, அதிக உயரமில்லாத அடுக்கு மாடி குடியிருப்பின் உயரத்தை 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக உரிய விதி களில் திருத்தம் செய்யப் படும் என்று வீட்டு வசதித்துறை அமைச் சர் சு.முத்துசாமி தெரிவித்தி ருந்தார்.
இந்நிலையில், தற்போது ஒருங் கிணைந்த கட்டிட விதிகளில் திருத் தம் செய்து அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விதிகளில், ஏற்கெனவே 3 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டர் என்றி ருந்ததை, அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டர் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
எளிதாக குடிநீர் இணைப்பு: எனவே, அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்குள் உள்ள கட்டடங்களுக்கு பணி முடிப்பு சான்றிதழ் பெற அவசியம் இல்லை. இதன் மூலம், எளிதாக மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு களை பெற இயலும்.அதே போல், அதிக உயரமில்லாத கட்டிடங்களை பொறுத்தவரை, அக்கட்டடத்தின் அதிகபட்ச உயரம் 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்தப்பட் டுள்ளது. இதன் மூலம், அக்குடியிருப்புகளில் அமையும் வீடுகளில் தேவையான வசதிகளை மேற் கொள்ள இயலும்.