சென்னை, மார்ச் 13- இந்தியாவின் முன்னணியில் மற்றும் சென்னையின் மிகப் பெரிய அளவில் உள்ள ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்ட் யூரோலஜி மருத்துவமனை, மார்ச் 14 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக சிறுநீரக நாளை முன்னிட்டு தனது 2ஆவது சிறுநீரக பராமரிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.
ஓல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி 5 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்ற இந்த ஓட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறுநீரக பராமரிப்பிற்கான விழிப்புணர்வை மிகுந்த ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர் என இம்மருத்துவமனையின் நிருவாக இயக்குநர் டாக்டர் அருண்குமார் மற்றும் டாக்டர் நவீனாத் ஆகியோர் தெரிவித்தனர்.