திருவாரூர், மார்ச் 12- திருவா ரூர் பெரியார் மன்றத்தில் 9.3.2024 மாலை 5 மணி அளவில் திராவிடர் கழக தொழி லாளர் அணியின் கலந்துரையாடல் கூட் டம் நடைபெற்றது.
அக்கூட்டத்திற்கு திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் திருச்சி மு சேகர் தலைமை ஏற்றார்.
திராவிடர் கழக தொழிலாளர் பேரவை தலைவர் கருப்பட்டி சிவா, திராவிடர் கழக விவசாய தொழிலா ளர் அணி செயலாளர் வீர கோவிந்தராஜ், தலைமை கழக அமைப்பாளர் திரு வாரூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் மோகன் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் ஏராள மான தோழர்கள் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்திற்கு நேரு அவர் கள் செய லாளராக நிய மிக்கப்படுவதாக தீர்மா னம் நிறைவேற்றப்பட் டது. நியமிக்கப்பட்டுள்ள நேரு அவர்களுக்கு திரா விடர் கழக பொறுப்பா ளர்கள் உதவி செய்து ஏராளமான உறுப்பினர் களை அமைப்புசாரா தொழிலாளர் நல வாரி யத்தில் உறுப் பினராகி பயன்பெறச் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு சித்தார்த் தன் அவர்களையும் குட வாசல் ஒன்றியத்திற்கு செல்வகுமார் அவர்க ளையும் திருவாரூர் ஒன் றியத்திற்கு பாஸ்கரன் அவர்களையும் செயலா ளராக நியமிக்கப் பட்டு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
திருவாரூரில் கழக தொழிலாளர் அணியின் கலந்துரையாடல்
Leave a Comment