கடலூர், மார்ச் 8 கடலூரில் இரா.ச. குழந்தை வேலனார் அகவை 80 நிறைவு பகுத்தறிவு விழா கட லூர் நகர அரங்கத்தில் நடை பெற்றது. தொடக்க விழாவிற்கு அறக்கட்டளை செயலாளர் அய்ங்கரன் தலைமை தாங்கி னார். மா.போ.பாஸ்கரன் (திமுக), அகஸ்டின் பிரபாகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
அறக்கட்டளை தலைவர் இரா.ச. சொக்கநாதன் வரவேற் புரையாற்றினார். மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமாகிய பி. ஆர்.எஸ்.வெங்கடேசன் விழாவை துவக்கி வைத்தார். புதுச்சேரி சிவ.வீரமணி கோவன் கொள்கை முழக்கத்திற்கு தலைமை தாங் கினார். மக்கள் அதிகாரம் கோவன் குழுவினர் கொள்கை முழக்கம் எழுப்பினர். பாட்ட ரங்கத்திற்கு சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். வழக்கு ரைஞர் தி. ச. திருமார்பன், தென். சிவக்குமார் முன்னிலை வகித் தனர். ‘‘புலியென செயல் செய புறப்படு” என்ற பாட்டரங்க நிகழ்ச்சியில் இரா.ச.வேலுமணி, வெற்றிச்செல்வி, ஜானகிராஜா, பெருந்தேவன், விடுதலை கவி மனோ, ஓவியர் இரமேசு, ஆரோக்கிய செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிற்பகல் இசை முழக்கத்திற்கு கோபி என்கிற கோபாலகிருஷ் ணன் தலைமை தாங்கினார். சாது.ச.ராஜதுரை, அந்தோணி சாமி, திருத்தணி கலைமாமணி பன்னீர்செல்வம் குழுவினர் இசை வழங்கினர். கருத்தரங்கிற்கு கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மேயர் சுந்தரி ராஜா முன்னிலை வகித் தார். பொழிலன், வாலா சாவல் லன், துணைப் பொதுச் செயலா ளர் வழக்குரைஞர் சே.மெ.மதி வதனி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
‘‘பெரியார் பார்வையில், நான் கண்ட பெரியார்” நூல் வெளியீட்டு விழாவிற்கு கல்வி செம்மல் முனைவர் வி.முத்து தலைமையேற்று, நூலை வெளியிட்டார். கழகப் பொதுச்செயலா ளர் முனைவர் துரை.சந்திரசேக ரன் நூலினைப் பெற்றுக் கொண்டார். கவிஞர் க. எழி லேந்தி நூல் மதிப்புரையாற்றி னார். நூலாசிரியர் பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் ஏற் புரை வழங்கினார். இந்த நிகழ்ச் சியினை தொகுத்து கவிஞர் அன்பன் சிவா ஒருங்கிணைப்பு செய்தார். கவிஞர் ந.ரவி அரங்க மேலாண்மையை செய்தார். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.