ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 1:  கனடா – அமெரிக்கா உடனான நெருடல் விவகாரத்தில் கட்டுப்பாடு மோடியின் கையில் இல்லையா?

– த.ஆறுமுகம், வேளச்சேரி

பதில் 1: சிக்கல் எங்கே இதில் இருக்கிறது என்று கண்டறிந்து விளக்குபவர் நிச்சயம் விருது பெற வேண்டியவர் ஆவார்! அப்படிப்பட்ட குழப்பம் இதில் – ஏன் எல்லா பக்கங்களிலுமே உள்ளது!

கேள்வி 2: ஒன்றிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட தள்ளிவிட்டுள்ளதே மோடி – அமித்ஷா அண்ட் கோ?

– ம.வெற்றிவேலன், திருத்தணி

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 2: அந்த இரண்டு பேர்தான் ஆட்சி – என்னதான் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாடுக் கயிறு இருந்தபோதிலும் – 2024 வரை இதுஓடும்! அதற்கப்புறம் பெரிய கேள்விக்குறியே!

கேள்வி 3: புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து புதுச்சேரி மாணவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளார்களே?

– வே.காவியா, ஈரோடு 

பதில் 3: புத்திவரும்போது எவரும் போராடவே செய்வர். புதுச்சேரி மாணவிகளுக்குப் பாராட்டு.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 4: எங்கு செல்கிறோமோ அங்கு அந்த மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளது குறித்து?

– க.தருமசீலன், மதுரை

பதில் 4: வந்தேறிகளின் இலக்கணம் அது. அதைத்தான் கூறியுள்ளார் அந்த அம்மையார். அதேபோல எங்கே வாழுகிறோமோ அங்கு அந்த உணவைச் சாப்பிடக் கற்றுக்கொள்ள வேண்டுமா? பதில் கூறுவாரா அம்மையார்?

கேள்வி 5: துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்க குழு அமைக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை என்று ஆளுநர் கூறுகிறாரே?

– தி.முருகன், நாகர்கோவில்

பதில் 5: ‘நானே இராஜா! நானே இராஜா’ – பாடலை தினமும் பாடுவதுதான் அவரின் நாமாவளி!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 6: பணத்திற்காக தன்மானத்தை அடகு வைப்பவர் என்று பாஜக மாநிலத்தலைவர், நடிகர் கமலஹாசனைப் பார்த்து கேள்வி கேட்டுள்ளாரே?

– த.மருதமலை, புதுக்கோட்டை

பதில் 6: பதவிக்காக தன்மானத்தையே அடகு வைப்பவர்கள் இப்படிச் சொன்னால் எடுபடுமா?

கேள்வி 7:  பெண் ஓதுவார்கள் நியமனம் குறித்து அன்று மங்கையர்க்கரசி, காரைக்காலம்மையார், ஆண்டாள் போன்றவர்கள் தமிழ்நாட்டில் கடவுள் முன்பு பாடவில்லையா என்று ஹிந்துத்துவ வாதிகள் பேசிவருகின்றனரே?

– ப.முனுசாமி, சிதம்பரம்

பதில் 7: பாடினார்கள். ஆனால், கருவறைக்கு உள்ளே போக முடிந்ததா? எலும்பு தேய்ந்தும் போக முடியவில்லை. அதை திராவிட முதலமைச்சர் அல்லவா சாதித்துக் காட்டியுள்ளார்!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 8:  எனது அரசு கொண்டுவந்த தொழில்நுட்பத்தினால் ஊழல் குறைந்துவிட்டது என்கிறாரே மோடி?

– ச.காவேரி, கரூர்

பதில் 8: அப்படியானால் சி.ஏ.ஜி. என்ற மத்திய தணிக்கையாளர் அறிக்கையின்படி ஊழல் 7.5 லட்சம் கோடி ரூபாய் என்பதும் உயர்ந்த தொழில்நுட்பம் தானோ? புரியவில்லை நமக்கு!

கேள்வி 9:  பாஜகவின் வளர்ச்சிக்குப் பாதை அமைத்துக் கொடுத்தவர்களில் ஒருவரான உமா பாரதி, மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளாரே?

– ந.கிருஷ்ணமூர்த்தி, காஞ்சி

பதில் 9: ரொம்ப  நாளாகவே அவர் பெயரே மக்களிடம் ஞாபகத்தில் இல்லை; மறந்து போய்விட்டதை மீண்டும் நினைவூட்ட இப்படி ஒரு புதிய உத்தியோ – அல்லது இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (ஓபிசி) இல்லை என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடோ?

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 10:   பங்காரு லட்சுமணன், பண்டாரு தத்தாரேயா, வெங்கையா நாயுடு, தற்போது ரமேஷ் பிதாரி என தொடர்ந்து அக்கட்சியின் ஒடுக்கப்பட்ட மக்களின் முகங்களாக தங்களைக் கருதிக்கொள்ளும் தலைவர்களை சூழ்ச்சியில் சிக்கவைத்து அவர்களின் அரசியல் எதிர்காலத்தை காவு வாங்குவதை பாஜக வழக்கமாக கொண்டுள்ளதே?

– அ.அலமேலு, தாம்பரம் 

பதில் 10: ஆங்கிலத்தில் ‘Elimination Process’  என்ற சொற்றொடருக்கு அரசியல் விளக்கம் – வியாக்யானமோ தங்கள் கேள்வி? பலே, பலே!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *