பா.ஜ.க.வுக்கு பதிலடி: போதைப் பொருள் கடத்தல் பி.ஜே.பி.யை சேர்ந்த 14 பேர் மீது 23 வழக்குகள் உள்ளன சட்ட அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

2 Min Read

நாகர்கோவில்,மார்ச் 6- சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று (5-3-2024) நாகர்கோவில் மாவட்டத் தி.மு.க. அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது போதைப் பொருள் குறித்து தமிழ்நாடு அரசு மீது பா.ஜ.க. போலியான குற்றச்சாட்டு களை பா.ஜ.க. தெரிவித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, போதைப் பொருள் தொடர்பான வழக்குகளில் சிக்கியிருக்கும் பா.ஜ.க.வி னர் பட்டியலை வெளியிட்டார். இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு :

“பாஜகவைச் சேர்ந்த 14 பேர் மீது போதைப்பொருள் தொடர்பாக 23 வழக்குகள் உள்ளது. அவர்கள் குறித்த பட்டியல் :
1. சரவணன், உறுப்பினர்
2. ராஜேஷ், சென்னை 109ஆவது வட்ட தலைவர்
3. விஜய நாராயணன், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்
4. விஜயலட்சுமி, செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர்
5. மணிகண்டன், தாழ்த்தப்பட் டோர் பிரிவு மண்டல தலைவர்
6. ஆனந்த ராஜேஷ், திரு வள்ளூர் மேற்கு மாவட்ட எஸ்.சி./ எஸ்.டி. மாவட்ட துணைத் தலைவர்
7. ராஜா, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நலன் அபிவிருத்தி பிரிவு செயலாளர்
8. குமார் எ குணசீலன், உறுப்பினர்
9. மணிகண்டன், உறுப்பினர்
10. லிவிங்கோ அடைக்கலராஜ், பெரம்பலூர் மாவட்ட முன்னாள் செயலாளர்
11. சிதம்பரம் எ குட்டி, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவர்
12. ராஜா, விவசாய பிரிவு மாநிலச் செயலாளர்
13. சத்யா எ சத்யராஜ், உறுப்பினர்
14. காசிராஜன், மதுரை நகர இளைஞர் பிரிவு செயலாளர்

அண்ணாமலை, பா.ஜ.க.வில் உள்ள நபர்களிடம் போதைப் பொருள் நடமாட்டத்தை முதலில் தடுக்கட்டும். அதே போல் குஜராத் திலும் தடுக்கட்டும். பா.ஜ.க. ஆளும் பிற மாநிலங்களிலும் போதைப் பொருள் நடமாட்டத் தைத் தடுக்கட்டும். அதன்பிறகு அவர் தமிழ்நாட்டில் போதைப் பொருள் தடுப்பதை மக்கள் இயக்க மாக மாற்றுவதைப் பார்க்கட்டும்.
எங்களுடைய நோக்கம் அதைத் தடுக்கவேண்டும் என்பதுதான். போதைப்பொருள் நடமாட்டம் குறித்து அண்ணாமலைக்கு வேண்டு மானால் தகவல் தெரிந்திருக்கும். அதை அவர் தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.

தி.மு.க.வில் இருக்கும் உறுப்பினர் மீது ஒரு குற்றச்சாட்டு வந்தால் உடனடியாக அவர்களைக் கட்சி யில் இருந்து நீக்கிவிடுகிறோம். குற்றப் பின்னணி உடையவர்களைக் கட்சியில் வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியம் தி.மு.க.விற்கு என்றும் கிடையாது.
இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இல்லம் தேடி குட்கா என பேசியுள்ளார். ஆனால் அவர் மீதே வழக்கு உள் ளது என்பதை மறந்துவிட்டுப் பேசியுள்ளார்.” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *