வரைவுப் பட்டியலுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

2 Min Read

அரசியல்

சென்னை, அக்.1 வரைவுப் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம். என தமிழ் நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல் ஆகிய பணிகளை மேற்கொள்வ தற்கு அக்.27-ஆம் தேதியில் இருந்து வாய்ப்புகள் அளிக்கப்படவுள்ளன. இதற்காக அன்றைய தினத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

அந்தத் தேதியிலிருந்து வாக் காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் உரிய படிவங்கள் மூலமாக பணிகளை மேற்கொள் ளலாம்.

அதேநேரத்தில், இந்தப் பணி களை ஆண்டு முழுவதும் இணைய தளம் வழியாக மேற்கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி,  இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகிய பணிகளை எப்போது வேண்டுமானாலும் செய்ய முடியும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

எதற்கு எந்தப் படிவங்கள்?: வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்கு படிவம் 6, வெளிநாடு வாழ் தமிழராக இருந்தால், அவரது பெயரைச் சேர்க்க படிவம் 6ஏ, பட்டியலில் பெயர்களை நீக்க படிவம் 7-அய் பயன்படுத்த வேண்டும்.

ஒரு தொகுதியிலிருந்து வேறொரு தொகுதிக்கு இடமாறி னாலோ அல்லது இப்போது வசிக்கும் தொகுதிக்குள்ளேயே இடம் மாறினாலோ படிவம் 8-அய் பயன்படுத்தி முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கு வாக்காளர்கள் தாங் களாகவே விருப்பத்தின் அடிப் படையில் ஆதார் எண்ணை அளித்து வருகின்றனர். அந்த வகையில், படிவம் 6பி-இல் ஆதார் எண்ணைக் குறிப்பிட்டு அளிக்க லாம்.

இந்தப் பணிகளை அக்.28-ஆம் தேதியிலிருந்து ஒரு மாதத்துக்கு நடைபெறும் வாக்காளர் பட் டியல் திருத்தப் பணிகளின் போது செய்யலாம். இத்துடன் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் வழியே எப்போது வேண்டுமானா லும் செய்து கொள்ளலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *