புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட வேண்டும் மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ வலியுறுத்தல்

2 Min Read

சென்னை, மார்ச். 4 – ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதி ராக ஜனநாயக இயக்கங்களை நடத்த வேண்டும் என்று மூத்த வழக்குரைஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய குற்றவியல் சட்டம் (அய்பிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (அய்இசி) ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்த சட்டங்களுக்கு மாற்றாக, பார திய நியாய சன்ஹிதா-2023, பாரதிய நாக ரிக் சுரக்ஷா-2023, பாரதிய சாக்ஷியா-2023 ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அம லுக்கு வரும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டக்குழு சார்பில் 2.3.2024 அன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ‘புதிய குற்றவியல் சட்டங்கள்’ எனும் தலைப்பில் மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ பேசினார்.

அப்போது, இந்தச் சட்டங்களில் உள்ள முரண்பாடுகள், குறைகள், தவறு கள், பொருத்தமின்மை, குழப்பங்கள் போன்றவற்றை விளக்கினார். இந்த சட்டங்கள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவில்லை; பறிக் கிறது என்றார். “ஏற்கெனவே உள்ள சட்டங்களில் தேவையேற்படின் திருத்தம் கொண்டு வந்து புதிய பிரிவுகளை சேர்க்க லாம். மாறாக, பழைய சட்டத்தின் பெயரை மாற்றி, சில பிரிவுகளை இணைத்து, புதி தாக ஒரு சில பிரிவுகளை இணைத்து, குழப்பமான விளக்கங்களை கொடுத் துள்ளனர். இந்த சட்டத்தின் பாதகங் களை மக்களிடம் வழக்குரைஞர்கள் எடுத்துரைக்க வேண்டும். வழக்கு தொடுப்பது, ஜனநாயக ரீதியில் இயக்கம் நடத்துவது என வழக்குரைஞர்கள் போராட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நீதித்துறையில் வெளிப்படைத் தன்மை

சங்கத்தின் செயல் தலைவரும், பார் கவுன்சில் உறுப்பினருமான வழக்குரைஞர் ஏ.கோதண்டம் கருத்தரங்கின் நோக்கம் பற்றி குறிப்பிடுகையில், “அண்மைக் கால நீதிமன்ற தீர்ப்புகள், நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய் கிறது. பணி ஓய்வுக்கு பிறகு நீதிபதி களுக்கு வழங்கப்படும் பொறுப்புகள், பதவிகள், அவர்கள் எத்தகைய தீர்ப்பு களை அளித்திருப்பார்கள் என்பதை யூகிக்க முடிகிறது.
இத்தகைய நிலையில் நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் சி.பி.எம். தலைவர் சீத்தாராம் யெச்சூரி தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக நீதிபதிகள் நியம னத்தில் வெளிப்ப டைத்தன்மை வலி யுறுத்துகிறோம்” என்றார்.
இந்த நிகழ்விற்கு சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் பி.பால சுப்பிர மணியன் தலைமை தாங்கினார். செயலா ளர் பி.சீனிவாசன் வரவேற்றார். ‘நீதித் துறையில் வெளிப்படைத் தன் மையை யும் நேர்மையையும் உறுதிப் படுத்துதல்’ எனும் தலைப்பில் ஒடிசா உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி டாக்டர் எஸ்.முரளிதர் பேசினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். சிவக்குமார் விருந்தினர்களை கவுர வித்தார். சங்கத்தின் மாவட்ட நிர்வாகி ஷின்னு நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *