சென்னை, மார்ச். 4- பொறியாளர், சுகாதார ஆய்வாளர், வரைவாளர், பணி ஆய்வாளர், மேற்பார்வை யாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான நேரடி தேர்வில்காலியிடங்களின் எண்ணிக்கை2,455 ஆக அதிகரிக் கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர் வாகத்துறை அறிவித்துள்ளது.
உதவிப் பொறியாளர், இள நிலை பொறியாளர், நகர திட்ட மிடல் அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், மேற் பார்வையாளர், பணி ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய பதவி களில் 1,933 காலியிடங்களை நேர டியாக நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் நக ராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த பிப்ரவரி 2ஆ-ம் தேதி வெளியிட்டிருந்தது. இந்த காலியிடங்கள் மாநகராட் சிகள், நகராட்சிகள், பேரூராட்சி கள், தமிழ்நாடு குடிநீர்மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகியவற்றில் உள்ளன.
பணியின் தன்மைக்கேற்ப சிவில், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரிகள், டிப்ளமோ சிவில், மெக்கானிக்கல், எலெக்ட் ரிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர் கள், பட்டப்படிப்புடன் சுகாதார ஆய்வாளர் டிப்ளமோ முடித்தவர் கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான இணைய வழியில் விண்ணப்பப் பதிவு பிப்.9ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர் கள் www.tnmaws.ucanapply.com என்ற இணையதளத்தை பயன் படுத்தி மார்ச் 12ஆ-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 1933இல் இருந்து 2104ஆக முதலில் உயர்த்தப்பட்டது. தற்போது காலியிடங்களின் எண்ணிக்கை 2104இல் இருந்து 2,455 ஆக அதி கரிக்கப்படுவதாக நகராட்சி நிர் வாகத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானோர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்துத் தேர்வு ஜூன் 29, 30ஆ-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மார்ச் 12-ஆம் தேதி முடிவடைகிறது.
20 சதவீத இடங்கள்: ஒவ்வொரு பதவிக்கும் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இணைய வழி விண்ணப்ப முறை, துறைகள் வாரியாக எந் தெந்த இடங்களில் எந்தெந்த பதவிகள் காலியாக உள்ளன, கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, தேர்வுக்கான பாடத்திட்டம் ஆகிய அனைத்து விவரங்களையும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.