தஞ்சை, மார்ச் 3- ஜிஎஸ்டியால் மக்கள் பல சிரமங்களைச் சந்தித்து வரும் நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் என்ன மாற்றங்களை, திருத்தங்களை கொண்டு வர வேண்டும், முடிந்தால் ஜிஎஸ்டியை ரத்து செய்வது பற்றியும் நடவ டிக்கை எடுப்போம் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் திமுக சார்பில் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் 2024 நாடாளு மன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக் கும் குழு கருத்துக்கணிப்பு கூட்டம், நேற்று (2.3.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ் விஜயன், எழிலன் நாகநாதன், சென்னை மேயர் ஆர்.பிரியா மற் றும் தஞ்சை தொகுதி மக்களவைத் தலைவர் பழநிமாணிக்கம் உள் ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள் ஆகியோரிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.கே.எஸ்.இளங் கோவன், “எங்களுடைய நோக்கம் தேர்தல் அறிக்கை என்பது, மக்க ளின் எண்ணங்களை பிரதிபலிப்ப தாக இருக்க வேண்டும் என்கிற காரணத்தால் மக்களிடமே கேட்டு, என்ன தேவை என்பதை அறிந்து, அதனை தேர்தல் அறிக் கையாக வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கூடியிருக்கி றோம். மனுக்கள் பெறும் சுற்றுப் பயணம் இன்றுடன் நிறைவ டைந்து, நாளை (3.3.2024) முதல் குழுவினர் கூடி மனுக்களை பரிசீலித்து, எந்த அளவிற்கு தேர்தல் அறிக்கையில் இணைக்கலாம் என் பதை முடிவு செய்து தேர்தல் அறிக்கையில் இணைப்போம்.
பெரும்பாலான மனுக்கள் ஒன் றிய அரசிடம் ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, ஜிஎஸ் டியில் சந்திக்கும் சிரமங்கள் ஆகிய வற்றை சொல்லி இருக்கிறார்கள். இவற்றிற்கு நிவாரணம் தேவை, இவை ஒன்றிய அரசு செய்யக்கூடி யது. இந்த தேர்தலைப் பொறுத்த வரை, மாநிலங்கள் வஞ்சிக்கப்படு கின்றன. ஜிஎஸ்டி வரிவிதிப்பு வந்த பிறகு, மாநில அரசுக்கான நிதியை ஒன்றிய அரசு தங்களுக்கு வேண் டிய மாநிலங்களுக்கு அதிக பங்க ளிப்பையும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறைவான பங் களிப்பையும் வழங்கி வருகிறார்கள். இது வளர்ந்து வரும் மாநிலங்களுக் குச் செய்யும் துரோகம். ஆகவே, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் என்ன மாற்றங்களை, திருத்தங்க ளைக் கொண்டு வர வேண்டும், முடிந்தால் ஜிஎஸ்டியை ரத்து செய்துவிட்டு முன்பு போல விற் பனை வரி, வருமான வரி என இரண் டாக பிரிப்பது பற்றி கோரிக்கை வைப்போம்” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், நீலமேகம், மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டில் வளர்ச்சி திசையை நோக்கி இருக்கும் டி.கே.எஸ்.இளங்கோவன் தகவல்
Leave a Comment