வாக்குச் சுத்தம்

viduthalai
2 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப் பேற்று குறுகிய காலத்திலேயே வாக்குறுதிகளாகச் சொன்னவற்றில் 505க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்

அரசு, திராவிடர் கழகம்

♦ சுரோனா நிவாரண நிதியாக ரூ.4000 தொகையை தேர்தலில் வெற்றிபெற்றதும் முதல் கையெழுத்தாக இரண்டு தவணைகளாக கொடுத்தார்.
♦ மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி
♦ விவசாய நகைக்கடன் தள்ளுபடி
♦ பால் விலை குறைப்பு.
♦ பெட்ரோலுக்கான விலை குறைப்பு,
♦ வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல்.
♦ இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம்
♦ சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைத்தல்.
♦ நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் துறையின் சார்பில் வழங்கப்படும் வீடுகள் இனி குடும்பத் தலைவிகளின் பெயரில்தான் வழங்கப் படும் என்ற அறிவிப்பு.
♦ 5 சவரனுக்கு மிகாமல் வைக்கப்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்தது.
♦ அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற செயல்பாடு
♦ பயிற்சி முடித்த அரச்சகர்களுக்கு பணியை வழங்கியது. பெண் ஒருவர் ஓதுவாராக நியமனம்.

அரசு, திராவிடர் கழகம்

♦ இல்லம் தேடி கல்வித் திட்டம்.
♦ மருத்துவமனைக்கு வரமுடியாத முதிய வர்கள். கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்.
♦ 2022 ஆம் ஆண்டு மழைவெள்ளத்தின் பாதிப்பு எதுவும் இல்லாமல் சென்னை உள்ளிட்ட பெருமழை பாதிப்பு நகரங்களை நன்கு திட்டமிட்டு வெள்ளத்தடுப்பை ஏற்படுத்தியது.
♦ அய்ந்தாம் வகுப்புவரை காலை சிற்றுண்டி
உயர்கல்வியில் பெண்களுக்கு முக்கியத்துவம்

அரசு, திராவிடர் கழகம்
தமிழ்நாடு என்னதான் வளர்ந்த மாநிலமாக இருந்தாலும், உயர்கல்வி படிப்பில் மாணவ – மாணவிகளுக்கு இருக்கும் தடைகள் அவர்களின் எதிர்காலத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது. அதனை கருத்தில் கொண்டு தி.மு.க. தலைமை யிலான அரசு உயர்கல்வியில் சேரும் பெண் களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்துகிறது. இந்த திட்டம் வாயிலாக இலட்சக்கணக்கான ஏழை-எளிய மாணவிகள் பயன்பெறுகிறார்கள்.

மகளிருக்கான இலவசப் பேருந்து

ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள். அவர்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை. இது தொடர்பாக திமுக பெரியாரிய கொள்கையோடு உறுதியாக இருக்கிறது. பெண்கள் நலன் மற்றும் அவர்கள் சாதனைகள் புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக செயலாற்றி வருகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட் டும். அனைவரும் இலவசமாக

பேருந்துகளில் சென்று வரும் வகையிலும் இலவசப் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் வாயிலாக பல கோடிப்பெண்கள் பலன் பெற்றுள்ளனர்.

அரசு, திராவிடர் கழகம் அரசு, திராவிடர் கழகம்

முதலீடு ஈர்ப்பு

முதலீடு ஈர்ப்பில் திமுக அரசு தனது ஆட்சிப்பொறுப்பேற்ற ஒரே வருடத்தில் ரூ.68 ஆயிரத்து 375 கோடி முதலீட்டினை ஈர்த்துள்ளது. இதன் வாயிலாக 2 இலட்சத்து 5 ஆயிரத்து 802 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு கள் ஏற்பட்டுள்ளன. அரசின் சார்பில் 130 புரிந்து ணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன.
சமூகநீதிசம உரிமை
தமிழ்நாட்டுக்கு ‘சமூக நீதியின் தொட்டில்’ என்ற அடைமொழியும் உண்டு அதனை மீண்டும். உறுதி செய்யும் பொருட்டு அரசு அறிவித்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். குறவர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவி அறிவிப்புகள் மற்றும் திட்ட முன்னெடுப்புகள் அரசின் சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *