சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில்
பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து எழுச்சியுடன் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை,பிப்.25- ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து. திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் 24.2.2024 அன்று மாலை 4 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இளைஞரணி மாநில செயலாளர் நாத்திக பொன்முடி தலைமையில் நடைபெற்றது.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு. சண்முகப் பிரியன் அனைவரையும் வரவேற்றார்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் இரா.வெற்றி குமார், எ.சிற்றரசன், தா.தம்பிபிரபாகரன், மு.அருண்குமார், கோ.வேலு, மா.செல்லத்துரை, ப.வேல்முருகன், சு.அறிவன், க.ஜெகநாதன், க.வெற்றிவேல், முனைவர் வே.ராஜவேல், ச.குமார், நா.கமல்குமார், அ.சவுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர்.
துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆர்ப்பாட்டத் தொடக்க உரையாற் றினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ. சுரேசு இணைப்புரை வழங்கினார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், முனைவர் துரை.சந்திர சேகரன், பொருளாளர் வீ.குமரேசன், கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கி ணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப்பொதுச்செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, தலைமைக்கழக அமைப்பாளர் த.சீ.இளந்திரையன் மற்றும் தலைமைக்கழக அமைப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், கழகப்பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன ஆர்ப்பாட்ட சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில்:
எச்சரிக்கை எச்சரிக்கை! இந்திய மக்களே எச்சரிக்கை! இந்தியாவை அழிக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சிடம் எச்சரிக்கை!
பாசிச ஆட்சி நடத்துகின்ற பா.ஜ.க.விடம் எச்சரிக்கை! தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் தராதவர்கள் வாக்கை அள்ள வருகிறார்கள் எச்சரிக்கை!
நீட்டைத் தலையில் கட்டியவர்கள் நாட்டை மீண்டும் ஆளுவதா? இந்திய மக்களே எச்சரிக்கை! சமூகநீதிக்கும் ஜனநாயகத்துக்கும் ஆபத்து ஆபத்து! ஒடுக்கப்பட்டோர் உரிமைகளுக்கு ஆபத்து! அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து!
மீட்டெடுப்போம் மீட்டெடுப்போம்! ஆர்.எஸ்.எஸ்.சிடமிருந்து மீட்டெடுப்போம்! பாஜகவிடமிருந்து இந்தியாவை மீட்டெடுப்போம்!
ஏர்போர்ட் எல்லாம் அதானிக்கு! ஏர் இந்தியா டாடாவுக்கு! பெட்ரோல் கொள்ளை அம்பானிக்கு! பட்டை நாமம் மக்களுக்கு!
சுரங்கமெல்லாம் அதானிக்கு சுடுகாடு மட்டும் மக்களுக்கு! துறைமுகமெல்லாம் அதானிக்கு! துப்புரவு வேலைதான் நம்மாளுக்கு! ரயில் நிலையங்கள் அதானிக்கு! பக்கோடா வியாபாரம் இளைஞர்களுக்கு! டெலிகாம் சந்தை அம்பானிக்கு! டெலிவரி வேலை படிச்சவனுக்கு!
கல்வித் துறையை வணிகமாக்கும் தேசியக் கல்விக் கொள்கைத் திணிப்பு! மருத்துவக் கல்விக் கனவைப் பறிக்கும் நீட் தேர்வு திணிப்பு! உயர்கல்விக்
கூடங்களெல்லாம் இடஒதுக்கீடு பறிப்பு!
ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என சொன்ன மோடி உத்தரவாதம் எங்கே போச்சு? உன்னாவ்வழக்கு என்ன ஆச்சு? ஆசிபா வழக்கு என்ன ஆச்சு? மகளிருக்குப் பாதுகாப்பு மண்ணாச்சு!
மதச் சார்பின்மைக்கு வேரறுப்பு மாநில உரிமைகளுக்கு மறுப்பு, சமூக நீதிக்கு கதவடைப்பு – பத்தாண்டு பா.ஜ.க. ஆட்சியில் மொத்தமாய் உரிமைகள் பறிபோச்சு!
தோற்கடிப்போம் தோற்கடிப்போம் ஸநாதனக் கும்பலை தோற்கடிப்போம். சமூக நீதியை வென்வெறடுப்போம் சனா தனத்தை வேரறுப்போம்! என தோழர்கள் ஒலி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்: தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக் குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு. அன்புச் செல்வன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தைய்யன், செயலாளர் கோ. நாத்திகன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு. மோகன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வே. பாண்டு, செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் சுந்தரம், காஞ்சிபுரம் மாவட்டத்தலைவர் அ.வெ. முரளி, கும்மிடிபூண்டி மாவட்டத் தலைவர் புழல் த. ஆனந்தன், ஆத்தூர் மாவட்டச் செயலாளர் நீ.சேகர், ஆவடி மாவட்டத் தலைவர் வெ. கார்வேந்தன், செயலாளர் இளவரசன், உசிலம் பட்டி மாவட்டச் செயலாளர் முத்துக்கருப்பன், திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ. மோகன், தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் உத்திராபதி, தொழிலாளரணி செயலாளர் வி.சி. வில்வம், கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் அதிரடி க. அன்பழகன்.
இளைஞரணித் தோழர்கள்: வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் நா. பார்த்திபன், செயலாளர் பா. பார்த்திபன், செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணி அணி தலைவர் செ. கவுதமன், செயலாளர் வினோத், கரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ், செயலாளர் பெரியார் செல்வன், தஞ்சாவூர் மாவட்ட இளைஞரணி தலைவர் சுப்பிரமணியன், விருத்தாசலம் மாவட்ட இளைஞரணித் தலைவர் செ. சிலம்பரசன், செயலாளர் சே. பெரியார்மணி, திருவாரூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் கோ.பிளாட்டோ, செயலாளர் மு. மதன், திண்டிவனம் மாவட்ட இளைஞரணி அணி தலைவர் ரமேஷ், செயலாளர் தேவராஜ், கடலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் நா. உதயசங்கர், புதுச்சேரி மாவட்ட இளைஞரணி தலைவர் தி. இராசா, செயலாளர் ச.சித்தார்த், ஆவடி மாவட்ட இளைஞரணி தலைவர் சோபன்பாபு, செயலாளர் கண்ணன், கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி தலைவர் ச. சக்ரவர்த்தி, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் – வி. கோவிந்தராசு, புதுக் கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர் – காரல்மார்க்ஸ், நாகை மாவட்ட இளைஞரணி தலைவர் இராஜ்மோகன், பெரம்பலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் தமிழரசன், மன்னார்குடி மாவட்ட இளைஞரணித் தலைவர் இராஜேஷ் கண்ணா, குடந்தை மாவட்ட இளைஞரணித் தலைவர் நித்யானந்தம், அரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத்குமார், மயிலாடுதுறை மாவட்ட இளைஞரணி தலைவர் அருள்தாஸ்.
மாணவர் கழகம்: மாநில மாணவர் கழக செயலாளர் செந்தூரபாண்டியன், சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் இளமாறன், துணைச் செயலாளர்கள் செ.பெ. தொண்டறம், தங்கமணி, அறிவுச்சுடர், செய்யாறு மாவட்ட மாணவர் கழகத் தலைவர் வெங்கடேசன்.
மகளிரணி தோழர்கள்: பொதுக்குழு உறுப்பினர்
சி. வெற்றிச்செல்வி, க. இறைவி, வி.வளர்மதி, மு. பவானி, வி.யாழ்ஒளி, மா.சண்முகலட்சுமி, பசும்பொன் அ.ப. நிர்மலா, த. மரகதமணி, பெரியார்செல்வி, அறிவுமதி, அன்புமதி, பூவை செல்வி, மா.தமிழரசி, ரேவதி, பகுத்தறிவு, அமலசுந்தரி, சீர்த்தி, அறிவழகி, வா.தங்கமணி.
வட சென்னை: கி. இராமலிங்கம், தி.செ. கணேசன்,சி. பாசுகர், ச. இராசேந்திரன், கு. ஜீவா, கண்மணி துரை, மு. டில்லிபாபு, வி. இரவிக்குமார்,
தென் சென்னை: டி.ஆர்.சேதுராமன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், ந.இராமச்சந்திரன், அரங்க.இராசா. மு.இரா.மாணிக்கம், மாரியப்பன், பெரியார் யுவராஜ், இரா.மாரிமுத்து.
தாம்பரம் மாவட்டம்: தாம்பரம் சு. மோகன்ராஜ், பல்லாவரம் ச.ச. அழகிரி, இராமாபுரம் ஜெ. ஜனார்த்தனம், பாலமுரளி (சோமங்கலம்), கிழக்கு தாம்பரம்
ஜீவானந்தம், செ. சந்திரசேகர், ஊரப்பாக்கம் இரா. சந்திரகுமாரன்.
சோழிங்கநல்லூர்: நித்தியானந்தம், கு. சோமசுந்தரம், விடுதலை நகர் பி.சி. ஜெயராமன்.
ஆவடி மாவட்டம்: பா.தென்னரசு, தமிழ்ச்செல்வன், பூ. இராமலிங்கம், பெரியார் மாணாக்கன், முகப்பேர் முரளி, இரணியன் (எ) அருள்தாஸ், தமிழ்மணி, சோபன் பாபு, வெங்கடேசன், மணிமாறன், சந்தோஷ், பாலசுந்தர், சு. வேல்சாமி, எ. கண்ணன், சுரேஷ், வீரமணி, முகப்பேர் பெரியார், ராசேந்திரன், கலைவேந்தன், தமிழரசன், சரவணன், பகுத்தறிவுப் பாசறை, இரா. கோபால், உடுமலைவடிவேல், வை. கலையரசன், பெரியார் பிஞ்சுகள், அன்பழகன், வேல்முருகன், சி. வச்சிரவேல், ஏழுமலை, அ.வெ. நடராசன், அம்பேத்கர் சங்கர், சுந்தர்ராஜன், நா.அரவிந்தன் – மற்றும் தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி கழக மாவட்டங்களி லிருந்தும், மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இளைஞரணி பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் மணித்துரை நன்றி கூறினார்.