அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நேரடி நியமன வயது வரம்பு நீடிப்பு

viduthalai
1 Min Read

சென்னை, பிப்.25 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியர் பணி நியமனங் களுக்கான வயது உச்ச வரம்பு பொதுப் பிரிவுக்கு 53 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 58 ஆகவும் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை விவரம்:
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் அரசுப் பள்ளிகளில் அனைத்து வகை யான ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக் கான வயது உச்ச வரம்பை பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதர பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வயது உச்சவரம்பு அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆசிரியர் பட்டதாரிகள் வரவேற்பு அவரின் அறிவிப்பை செயல்படுத்துமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் தமிழ்நாடு அரசுக்கு கருத்துரு வழங்கியிருந்தார். அதை ஆய்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங் குப்படுத்துதல் சட்டம் மற்றும் தொடர்பு விதிகளின்கீழ் அனுமதிக்கப்பட்ட ஆசி ரியர் பணியிடங்களுக்கு மேற்கொள்ளப் படும்

நேரடி நியமனங்களுக்கான வயது உச்ச வரம்பு பொதுப் பிரிவுக்கு 53 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 58 ஆகவும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு ஆசிரியப் பட்டதாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *